News துருக்கியில் 17 மணிநேரம் போராடி தன் சகோதரனை காப்பாற்றிய சிறுமி!

துருக்கியில் 17 மணிநேரம் போராடி தன் சகோதரனை காப்பாற்றிய சிறுமி!

-

துருக்கி- சிரியா எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கி உள்ளது. இன்றைய நிலவரப்படி உயிரிழப்பு 15 ஆயிரத்தை தாண்டியது. இடிபாடுகளை தோண்டத்தோண்ட சடலங்கள் தென்பட்ட வண்ணம் உள்ளன. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளின்போது எடுக்கப்பட்ட காணொளிகள், புகைப்படங்கள் சமூகவளைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், வடக்கு சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட சிறுமி, 17 மணிநேரம் வரை தனது சகோதரனை காப்பாற்ற போராடிய வீடியோ வைரலாகி வருகிறது. அவர்கள் இருவரும் வீட்டில் இருக்கும்போது, நிலநடுக்கத்தில் சிக்கியுள்ளனர். இதில், மரியம் என்ற அந்த 7 வயது சிறுமி, இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுத்த நிலையில் இருக்கிறார். அவருக்கு அருகே சிறுமியின் சகோதரன் படுத்து கிடக்கிறார். இருவரும் நகர முடியாமல் கிடக்கின்றனர்.

எனினும், சகோதரன் மீது தூசு உள்ளிட்ட எதுவும் விழுந்து விடாமல் இருக்க தலையில் கையை கொண்டு சிறுமி போர்த்தியபடி காணப்படுகிறார். சிமெண்ட் தூண்களுக்கு கீழே சிக்கியிருந்த இரண்டு பேரையும் மீட்பு குழுவினர் மீட்டு சிகிச்சைக்கான அனுமதித்துள்ளனர்.

இதேபோல் சிரியாவின் அப்ரின் நகரில் நிலநடுக்கத்தால் நொறுங்கிய மருத்துவமனைக்குள் தாய் இறந்த நிலையில், தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் ஒரு பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. இதுதொடர்பாக மீட்புக்குழுவினர் பகிர்ந்துள்ள வீடியோ, பார்த்தவர்களை பதற வைத்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.