NewsTwitter செயலிக்கு மாற்றாக அறிமுகமாகியுள்ளது Bluesky செயலி

Twitter செயலிக்கு மாற்றாக அறிமுகமாகியுள்ளது Bluesky செயலி

-

Twitter செயலிக்கு மாற்றாக அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி Jack Dorsey புதிய சமூக வலைத்தள செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். 

Twitter நிறுவனத்தை உலகின் முன்னணி பெரும் பணக்காரரான Elon Musk கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 

இதன்போது, Twitter நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த  Jack Dorsey அந்நிறுவனத்திலிருந்து வெளியேறினார். எனினும், அவர் விரைவில் Twitter நிறுவனத்தில் மீண்டும் இணைவார் என தகவல்கள் வெளியாகின.  

இந்நிலையில், இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக Twitter போன்ற புதிய சமூக வலைதளத்தை Jack Dorsey அறிமுகப்படுத்தியுள்ளார். 

Twitter-ஐ ஒத்த வகையில் பயன்படுத்தப்படும் இந்த சமூக வலைத்தளத்திற்கு Bluesky என பெயரிடப்பட்டுள்ளது. 

Apple இயங்குதளத்தில் சோதனை முயற்சியாக வெளியிடப்பட்டுள்ள இந்த செயலியானது விரைவில் Android இயங்குதளத்திலும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நடப்பாண்டு மே மாதத்திற்கு இதன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு தயாராகிவிடும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ள Jack Dorsey, பயனர்களின் வசதிக்கேற்ப இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...