Newsஅமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு - நால்வர் பலி

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு – நால்வர் பலி

-

அமெரிக்காவின் தென்பகுதியான அலபாமா மாகாணம் பர்மிங்காம் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புள்ளது. 

நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு வீட்டுக்கு மர்ம நபர்கள் சென்றனர். அப்போது திடீரென அந்த வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. 

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது அங்கு பெண் உள்பட 2 பேர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. 

இது குறித்து தகவலறிந்த பொலிஸார் அந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் எதற்காக கொலை செய்தார்கள் என்பது தொடர்பில் காரணம் வெளியாகவில்லை.

மேலும் இதற்கு முன்பு பர்மிங்காம் அருகே ராக்லாண்டில் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்புள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனவே அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

நன்றி தமிழன்

Latest news

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...

சூடான வாக்குவாதங்களால் சூடுபிடித்த நாடாளுமன்றம்

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே நாடாளுமன்றத்தில் கடுமையான வார்த்தை மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் ஹாக் பிரதமரை "நம்பிக்கையற்ற...

ட்ரம்ப் நிர்வாகத்தில் 80,000 விசாக்கள் இரத்து

அமெரிக்காவில் பெருந்தொகையான குடியேற்ற விசாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான...

விமானத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு

British Airways விமானத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்தியருக்கு 21 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் திகதி...

ஆஸ்திரேலியர்களிடம் மன்னிப்பு கேட்ட Microsoft

Microsoft தனது சந்தா திட்டத்தில் (subscription plan) ஏற்பட்ட விலை நிர்ணய பிரச்சினைக்காக ஆஸ்திரேலிய வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. இதற்கிடையில், ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம்...