Newsஅமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு - நால்வர் பலி

அமெரிக்காவில் பயங்கர துப்பாக்கி சூடு – நால்வர் பலி

-

அமெரிக்காவின் தென்பகுதியான அலபாமா மாகாணம் பர்மிங்காம் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புள்ளது. 

நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு வீட்டுக்கு மர்ம நபர்கள் சென்றனர். அப்போது திடீரென அந்த வீட்டில் இருந்து துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. 

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது அங்கு பெண் உள்பட 2 பேர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. 

இது குறித்து தகவலறிந்த பொலிஸார் அந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் எதற்காக கொலை செய்தார்கள் என்பது தொடர்பில் காரணம் வெளியாகவில்லை.

மேலும் இதற்கு முன்பு பர்மிங்காம் அருகே ராக்லாண்டில் 2 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்புள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனவே அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

நன்றி தமிழன்

Latest news

2063ல் நாட்டின் முதியோர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கப்படும்

மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ், அடுத்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் வடிவத்தை கோடிட்டுக் காட்டும் ஒரு தலைமுறை அறிக்கையை வெளியிட்டுள்ளார். 2063 ஆம் ஆண்டளவில், இலங்கையில்...

NDIS அமைப்பிலிருந்து விலக்கப்படும் செரிமானக் கோளாறுகள் உள்ள குழந்தைகள்

இரைப்பை குடல் கோளாறுகள் உள்ள குழந்தைகளை NDIS அமைப்பிலிருந்து அகற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வரும் புதன்கிழமை நடைபெறும் தேசிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் திருத்தங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட...

AUKUS ஒப்பந்தத்தின் கீழ் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கான திட்டங்கள்

AUKUS ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்தோ-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கான புதுமை மற்றும் செலவுத் திட்டங்களை அறிமுகப்படுத்த முத்தரப்பு நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதன்படி, அவுஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா...

ஆஸ்திரேலிய எல்லைப் படைகளின் பிடியில் இருந்து அகதிகள் படகு ஒன்று தப்பியது

அவுஸ்திரேலிய கடற்படை எல்லைப் படையில் இருந்து 12 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று தப்பிச் சென்றுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மேற்கு...

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மொழி பேசுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம்

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மொழி பேசுபவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய அறிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான வேலை விளம்பரங்களை ஆய்வு செய்த...

இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள விக்டோரியா காவல்துறை அதிகாரிகள்!

சம்பள தகராறு பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான விக்டோரியா காவல்துறை மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பில் விக்டோரியா பொலிஸ்...