Sportsஉலக பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வீரர்களை பின்னுக்கு தள்ளிய கிரிக்கெட் வீரர்

உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வீரர்களை பின்னுக்கு தள்ளிய கிரிக்கெட் வீரர்

-

இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு என்பதில் சந்தேகமில்லை. கிரிக்கெட் வீரர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு கிரிக்கெட் நட்சத்திரமும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள். இது தவிர, விளம்பரங்கள் உள்ளிட்ட பிற வருமானங்களும் உள்ளன. 

கிரிக்கெட் வீரர்களின் சம்பளமும், விளம்பர மதிப்புகளும் குவிந்து வருகின்றது. இதனால் அவர்களின் மதிப்பு பல நூறு கோடியை தாண்டி அதிகரித்து வருகின்றது. 

இப்படி இருக்கையில் தான் ஒவ்வொரு ஆண்டும் பணக்கார கிரிக்கெட் பட்டியல் ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த பட்டியலில் விராட் கோலி, தோனி போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் தான் எப்போதும் டாப்பில் இருப்பார்கள். 

இந்நிலையில் இந்த முறை கில் கிறிஸ்ட் என்கிற அவுஸ்திரேலியா முன்னாள் வீரர் பெயர் இடம்பெற்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு 3120 கோடி மதிப்பில் சொத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி, எம்.எஸ். தோனி அனைவரும் பணக்கார கிரிக்கெட் வீரர்கள். ஆனால் அவர்களில் யாரும் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் இல்லை.

அவுஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட் பணக்காரர்.

இதை உலகின் முன்னணி வணிக இதழான சிஇஓ வேர்ல்ட் மேகசின் வெளியிட்டு உள்ளது. கில்கிறிஸ்ட் வருவாய் சுமார் ரூ.3129.26 கோடி ($380 மில்லியன்). இந்தப் பட்டியலில் சச்சின் தெண்டுல்கர் இரண்டாவது இடத்தில் உள்ளார். ரூ.1399.55 கோடிகள் ($170 மில்லியன்). ஆனால் ஆடம் கில்கிறிஸ்ட் என்ற பெயரிலேயே மற்றொரு தொழிலதிபர் ஒருவர் எப் 45 என்ற ஜிம்மை நடத்தி வருகிறார். 

அவரின் சொத்து மதிப்பு இதில் சேர்த்துள்ளதால் கணக்கு எடுப்பில் தவறு நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.அதனையடுத்து, இப்பட்டியலில் முதலிடம் பெற்றது ரூ.1400 கோடி சொத்துக்கள் கொண்ட சச்சின் டெண்டுல்கர் தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பல முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் கில்கிறிஸ்ட். இதன் மூலம் ஒவ்வொரு வருடமும் கோடிகளை சம்பாதிக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ரூ.1000 கோடி ($115 மில்லியன்), நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ரூ.920 கோடி ($112 மில்லியன்) முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளனர். இந்திய கிரிக்கெட் வீரர்கள் பல்வேறு நிறுவனங்களின் பிராண்ட் அம்பாசிடர்களாகவும் உள்ளனர்.

பத்து பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் மற்றும் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சேவாக் இடத்திலும் எட்டாவது ரூ.300 கோடி ($40 மில்லியன்), யுவராஜ் ஒன்பதாவது ($35 மில்லியன்) இடத்திலும் உள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

சுற்றுலா தளமாக மாற்றவுள்ள ஆஸ்திரேலியாவிலுள்ள தீவு

குயின்ஸ்லாந்து மாநில அரசு, Great Barrier Reef அருகே அமைந்துள்ள ஒரு சிறிய தீவை சுற்றுலா மையமாக மாற்ற திட்டமிட்டுள்ளது. அதன்படி, கெய்ர்ன்ஸுக்கு வடக்கே அமைந்துள்ள Double...

கைதிகளுக்கு தியானம் கற்றுத்தரும் ஆஸ்திரேலிய பெண்

நியூயார்க்கின் Rikers தீவில் உள்ள ஒரு ஆஸ்திரேலியப் பெண் ஒரு அற்புதமான திட்டத்தை நடத்தி வருகிறார். முன்னாள் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் Joh Jarvis, கைதிகளுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும்...

Work from Home முறை மாற்றங்களுக்கு மன்னிப்பு கோரிய எதிர்க்கட்சித் தலைவர்

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார். ஆஸ்திரேலிய மக்களைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்படாது...

Gold Coast வீட்டில் தீப்பிடித்து எரிந்த மின்சார வாகனம்

கோல்ட் கோஸ்டில் உள்ள ஒரு வீட்டில் நேற்று (06) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்...

Work from Home முறை மாற்றங்களுக்கு மன்னிப்பு கோரிய எதிர்க்கட்சித் தலைவர்

வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதாகக் கூறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார். ஆஸ்திரேலிய மக்களைக் கலந்தாலோசிக்காமல் எந்த முடிவும் எடுக்கப்படாது...

கைதிகளுக்கு தியானம் கற்றுத்தரும் ஆஸ்திரேலிய பெண்

நியூயார்க்கின் Rikers தீவில் உள்ள ஒரு ஆஸ்திரேலியப் பெண் ஒரு அற்புதமான திட்டத்தை நடத்தி வருகிறார். முன்னாள் ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் Joh Jarvis, கைதிகளுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும்...