Newsஇங்கிலாந்தில் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல்

இங்கிலாந்தில் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல்

-

இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 

ஒரு சிலர் தேசியக் கொடியை கீழே இறக்கி அவமதிப்பு செய்துள்ளனர்.

இதையடுத்து, இங்கிலாந்து அதிகாரிகள் தூதரக வளாகத்தில் புதிய தேசியக் கொடியை பறக்கவிட்டனர். 

இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற்ற இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் மத்திய அரசு தலைநகர் புதுடெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரிகளை அழைத்து தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக குறிப்பில், இந்திய தூதரக வளாகம் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் இங்கிலாந்து அரசாங்கத்தின் அலட்சியத்தை இந்தியா ஏற்றுக்கொள்ள முடியாது. தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வது மற்றும் வழக்கு தொடரும் வகையில் இங்கிலாந்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

உலகில் அதிக மொழிகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

உலகில் அதிக மொழிகள் கொண்ட நாடுகளில், ஆஸ்திரேலியா முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளது. அதன்படி, 317 மொழிகளைக் கொண்ட ஆஸ்திரேலியா, உலகில் அதிக மொழிகளைக் கொண்ட நாடுகளில்...

விசா விண்ணப்பங்களுக்கு மத்திய அரசு அதிக கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியர்களிடம் மத்திய அரசு சட்டவிரோதமாக பலகோடி வர்த்தக கட்டணமாக வசூலித்துள்ளது தெரியவந்துள்ளது. அரசு பரிவர்த்தனைகளுக்கு பல பில்லியன் டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து, சட்டவிரோத வர்த்தக...

அடுத்த வாரம் செனட்டில் நிறைவேற்றப்படும் சர்வதேச மாணவர் சேர்க்கை தொடர்பான சட்டம்

ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர் சேர்க்கையை கட்டுப்படுத்துவதற்கான சட்டம் அடுத்த வாரம் செனட்டில் நிறைவேற்றப்படும் என்று பலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும், வெளிநாட்டு மாணவர்களின் குடியேற்றத்தைக் குறைக்க தாம் ஆதரவளிக்கப்...

மதுவில் உள்ள உள்ளடக்கம் பற்றி தெரியாமல் இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்களில் 75 சதவீதம் பேருக்கு மதுபானம் வாங்கும் போது பாட்டிலில் உள்ள லேபிள்கள் புரியவில்லை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியர்களில் நான்கில் மூன்று பேர்...

மதுவில் உள்ள உள்ளடக்கம் பற்றி தெரியாமல் இருக்கும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியர்களில் 75 சதவீதம் பேருக்கு மதுபானம் வாங்கும் போது பாட்டிலில் உள்ள லேபிள்கள் புரியவில்லை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியர்களில் நான்கில் மூன்று பேர்...

சாதனைகளை முறியடித்துள்ள மெல்பேர்ண் வெப்பம்

இந்த வார இறுதியில் மெல்பேர்ணில் வெப்பநிலை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸை எட்டும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டிசம்பர் மாதம் தொடங்க இன்னும் ஒரு...