Sportsவெற்றியை நோக்கி பயணித்த கொல்கத்தா - குறுக்கிட்ட மழையால் பஞ்சாப் வெற்றி...

வெற்றியை நோக்கி பயணித்த கொல்கத்தா – குறுக்கிட்ட மழையால் பஞ்சாப் வெற்றி – IPL 2023

-

ஐபிஎல் தொடரில் நேற்று இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின.

இந்த போட்டிக்கான நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதிரடியில் மிரட்டிய பிரம்சிம்ரன் சிங் 23 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து பனுகா ராஜபக்ஷ களம் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய ராஜபக்ஷ 30 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த நிலையில் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 32 பந்தில் 50 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் குவித்துள்ளது. இதையடுத்து 192 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தீப் சிங் மற்றும் ரஹ்மத்துலா குர்பாஸ் ஆகியோர் களம் புகுந்தனர்.

இதில் மந்தீப் 2 ஓட்டம், அடுத்து வந்த அனுகுல் ராய் 4 ஓட்டம், குர்பாஸ் 22 ஓ ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக இம்பேக் பிளாயராக வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். இவர் ஒருபுறம் நிலைத்து நின்று துடுப்பாட்டமாட மறுபுறம் இறங்கிய நிதிஷ் ராணா 24 ஓட்டம், ரிங்கு சிங் 4 ஓட்டம், ரஸல் 35 ஓட்டம் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். நிலைத்து நின்று ஆடிய வெங்கடேஷ் அய்யரும் 34 ஓட்டம் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

கொல்கத்தா 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக போட்டி நிறுத்தி வைக்க்கப்பட்டது.

மழை முடிந்த பின்னர் ஆட்டம் தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மழை நிற்காத காரணத்தால் ஆட்டம் முடிக்கப்பட்டது. டக் வொர்த் லீவிஸ் முறைப்படி கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 153 ஓட்டங்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த அணி 146 ஓட்டங்களே எடுத்திருந்தது. இதையடுத்து 7 ஓட்டம் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...