ட்விட்டரில் பதிவுகளை பதிவிடுவதன் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்ற அறிவிப்பை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்த ஒக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை தொடர்ந்து புதிய பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், ட்விட்டரில் பதிவிடும் பதிவுகள் மற்றும் விடியோக்கள் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அதிக உரையுடன் நீண்ட வீடியோக்கள், முக்கியமானவைகளை பதிவிடலாம் மற்றும் அவற்றை உங்களை பின்தொடருபவர்கள் பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.
இதனை பெறுவதற்கு செட்டிங்ஸில் உள்ள மானிடைஸ் (monetize) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் என்று எலான் மஸ்க் டுவீட் செய்துள்ளார்.
மேலும், அடுத்த 12 மாதங்களுக்கு, ட்விட்டர் பணம் எதையும் வைத்திருக்காது. உங்கள் பதிவுகள் மூலம் நாங்கள் பெறும் பணத்தை இனிமேல் நீங்கள் பெறுவீர்கள்.
இதன் மூலம் iOS மற்றும் Android இல் 70 சதவீதமும் இணையத்தில் 92 சதவீதமும் பணம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது என்றும் உங்கள் வேலையை மேம்படுத்தவும் நாங்கள் உதவுவோம், படைப்பாளர்களின் பண வாய்ப்பை அதிகரிப்பதே எங்கள் குறிக்கோள் என்றும் பதிவிட்டுள்ளார்.