Brisbaneஉலக சாதனை படைத்த அவுஸ்திரேலியர்

உலக சாதனை படைத்த அவுஸ்திரேலியர்

-

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த 33 வயதான லூகாஸ் ஹெல்ம்கே என்பவர் உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த நபர் 1 மணி நேரத்தில் 3,206 தண்டால்களை எடுத்து இதற்கு முன் செய்திருந்த உலக சாதனையை முறியடித்துள்ளார். 

இது ஒரு நிமிடத்திற்கு 53 என்ற சராசரியை கொண்டது.இதற்கு முன்பு கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் மற்றொரு அவுஸ்திரேலியரான டேனியல் ஸ்காலி என்பவர் அதிக தண்டால் எடுத்து சாதனை புரிந்துள்ளார். 

இதனை லூகாஸ் முறியடித்து இருக்கிறார். தனது ஒரு வயது மகனுக்கு ஊக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த சாதனை முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கின்னஸ் உலக சாதனைகள் புத்தகம் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.இதற்காக 2 முதல் 3 ஆண்டுகள் வரை அவர் பயிற்சி எடுத்து வந்துள்ளார். 

பிரிஸ்பேனில் தனக்கென பளுதூக்கும் ஜிம் ஒன்றையும் வைத்திருக்கும் லூகாஸ், இந்த சாதனை முயற்சியையும் அந்த உடற்பயிற்சி கூடத்திலேயே நடத்தி காட்டியிருக்கிறார்.இதனுடன் தனது சாதனையை முடித்து கொள்ள அவர் விரும்பவில்லை.

அதனால், இனி ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஒரு சாதனையையாவது முறியடிக்க வேண்டும் என அவர் திட்டமிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 1 முதல் வெளிநாட்டினர் வீடு வாங்க தடை

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு வாங்குபவர்கள் வீடுகளை வாங்குவதைத் தடை செய்வதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. வீட்டுவசதி நெருக்கடியை நிவர்த்தி செய்ய...

இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறுகிறார் போப்

ஒரு மாதத்திற்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புனித திருத்தந்தை பிரான்சிஸ், இன்று மருத்துவமனையை விட்டு வெளியேறத் தயாராகி வருகிறார். அதன்படி, போப்பிற்கு மருந்து சிகிச்சையுடன் சுமார் 2...

வீட்டிலிருந்து வேலை செய்யும் முடிவை மாற்றிய அல்பானீஸ்

வீட்டிலிருந்து வேலை செய்வது தொடர்பான ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் எடுத்த முடிவு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அல்பானீஸ் சமீபத்தில் அரசாங்க அதிகாரிகளை முழுநேரமாக அலுவலகத்தில் பணிபுரியுமாறு தெரிவித்தார். இருப்பினும்,...

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி நெருக்கடிக்கு தீர்வு வழங்கிய ஒரு நிபுணர்

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதிப் பிரச்சினைக்கு ஒரு அற்புதமான தீர்வை ஒரு சொத்து நிபுணர் கண்டுபிடித்துள்ளார். வீட்டுத் திட்டங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வீட்டு விலைகளை மேலும் உயர்த்த வேண்டும் என்று...

மின்சாரக் கட்டணம் அதிகரித்தால் நிவாரணம் வழங்கப்படும் – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியர்களின் மின்சாரக் கட்டணங்களுக்கு மேலும் கட்டண நிவாரணம் வழங்க பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தயாராகி வருகிறார். அதன்படி, தற்போது வழங்கப்படும் $300 கட்டணச் சலுகை $450 ஆக...

ஆஸ்திரிய பல்கலைக்கழகங்களுக்கு இனி நிதியளிக்கப் போவதில்லை – டிரம்ப் 

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் நிதி வெட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டதால், ஏழு முக்கிய ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி திட்டங்கள் சீர்குலைந்துள்ளன. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம், சிட்னி தொழில்நுட்ப...