Brisbaneஉலக சாதனை படைத்த அவுஸ்திரேலியர்

உலக சாதனை படைத்த அவுஸ்திரேலியர்

-

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த 33 வயதான லூகாஸ் ஹெல்ம்கே என்பவர் உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த நபர் 1 மணி நேரத்தில் 3,206 தண்டால்களை எடுத்து இதற்கு முன் செய்திருந்த உலக சாதனையை முறியடித்துள்ளார். 

இது ஒரு நிமிடத்திற்கு 53 என்ற சராசரியை கொண்டது.இதற்கு முன்பு கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் மற்றொரு அவுஸ்திரேலியரான டேனியல் ஸ்காலி என்பவர் அதிக தண்டால் எடுத்து சாதனை புரிந்துள்ளார். 

இதனை லூகாஸ் முறியடித்து இருக்கிறார். தனது ஒரு வயது மகனுக்கு ஊக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த சாதனை முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கின்னஸ் உலக சாதனைகள் புத்தகம் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.இதற்காக 2 முதல் 3 ஆண்டுகள் வரை அவர் பயிற்சி எடுத்து வந்துள்ளார். 

பிரிஸ்பேனில் தனக்கென பளுதூக்கும் ஜிம் ஒன்றையும் வைத்திருக்கும் லூகாஸ், இந்த சாதனை முயற்சியையும் அந்த உடற்பயிற்சி கூடத்திலேயே நடத்தி காட்டியிருக்கிறார்.இதனுடன் தனது சாதனையை முடித்து கொள்ள அவர் விரும்பவில்லை.

அதனால், இனி ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஒரு சாதனையையாவது முறியடிக்க வேண்டும் என அவர் திட்டமிட்டுள்ளார்.

Latest news

அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள்...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...

2026 இல் வட்டி விகித நிவாரணம் கிடைக்குமா?

2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அடமானதாரர்களிடையே வட்டி விகிதங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பதட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...

Bondi தாக்குதல் விசாரணையில் பிரதமரின் முடிவு

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையர்...