Newsசந்திரனில் ஜப்பான் விண்கலம் தரையிறங்கும் முயற்சி தோல்வி

சந்திரனில் ஜப்பான் விண்கலம் தரையிறங்கும் முயற்சி தோல்வி

-

ஐ ஸ்பேஸ் நிறுவனம் 2010-ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சந்திரனுக்கு வணிக ரீதியான போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் விண்கலங்கள் மட்டும் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன.

இதற்கிடையே, ஐ ஸ்பேஸ் நிறுவனத்தின் ஹக்குடோ என்ற விணகலம் கடந்த டிசம்பரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

கடந்த மாதம் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்த ஹக்குடோ விண்கலம், 100 கிலோமீற்றர் உயரத்தில் சந்திரனைச் சுற்றி வந்தது. இந்நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் சந்திரனில் தரையிறங்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் சந்திரனில் தரையிறங்குவதற்கு முன் அந்த விண்கலத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் தரையிறங்கிய போது அந்த விண்கலம் மோதி நொறுங்கியது.

சந்திரனில் தரையிறக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என விண்கலத்தை செலுத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் கார் விபத்து – மூன்று பேர் உயிரிழப்பு

விக்டோரியா பிராந்தியத்தில் நேற்று காலை லாரியும் காரும் மோதிய விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். Ballarat-இன் மேற்கே Stoneleigh-இல் உள்ள Urrambine-Streatham சாலை...

Upfield ரயில் பாதை தொடர்பில் Infrastructure Victoria முன்வைத்துள்ள கோரிக்கை

விக்டோரியா மாநிலத்திற்கான 30 ஆண்டுகால சாலை வரைபடத்தின் ஒரு பகுதியாக , மெல்பேர்ணின் வடக்கில் உள்ள Upfield ரயில் பாதையை மேம்படுத்தவும் நீட்டிக்கவும் கோரிக்கைகளை முன்னோக்கி...

மேற்கு ஆஸ்திரேலியாவில் சுறா தாக்குதலில் இருந்து உயிர்த்தப்பிய Surfer

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பிரபலமான கடற்கரையில் Surfing செய்து கொண்டிருந்த ஒருவர், ஒரு பெரிய வெள்ளை சுறாவால் தாக்கப்படுவதிலிருந்து மயிரிழையில் தப்பித்த அரிய தருணம்...

குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் நிறைவடைந்த ஸ்கேன் பிரச்சனைகள் குறித்த மதிப்பாய்வு

குயின்ஸ்லாந்தில் உள்ள Caboolture மருத்துவமனையின் சிறப்பு வெளிநோயாளர் பிரிவில் மருத்துவ ஸ்கேன்களின் மதிப்பாய்வு நிறைவடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர் சிகிச்சை பெறாத 38 நோயாளிகளை...

குயின்ஸ்லாந்து மருத்துவமனையில் நிறைவடைந்த ஸ்கேன் பிரச்சனைகள் குறித்த மதிப்பாய்வு

குயின்ஸ்லாந்தில் உள்ள Caboolture மருத்துவமனையின் சிறப்பு வெளிநோயாளர் பிரிவில் மருத்துவ ஸ்கேன்களின் மதிப்பாய்வு நிறைவடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர் சிகிச்சை பெறாத 38 நோயாளிகளை...