Newsகென்யாவில் ஒரே வாரத்தில் கொல்லப்பட்ட 10 சிங்கங்கள்

கென்யாவில் ஒரே வாரத்தில் கொல்லப்பட்ட 10 சிங்கங்கள்

-

கென்யாவில் உலகின் வயதான சிங்கங்களில் ஒன்றான லூன்கிடோ உட்பட 10 சிங்கங்கள் கடந்த ஒரு வாரத்தில் கொல்லப்பட்டுள்ளது , இது வனத்துறை அதிகாரிகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

‘கென்யாவில் உள்ள அம்போசெலி தேசிய பூங்காவில் இருந்த வயதான சிங்கங்களில் ஒன்றாக கருதப்படும் ஆண் சிங்கம் லூன்கிடோ உணவுக்காக ஓல்கெலுனியேட் கிராமத்திற்கு சென்றுள்ளது. 

அப்போது அங்கு கால்நடைகள் மேய்ப்பவர்களால் ஈட்டியால் தாக்கப்பட்டு அச்சிங்கம் உயிரிழந்துள்ளது. 

அதற்கு வயது 19. கொல்லப்பட்ட சிங்கம் கென்யாவின் வயதான சிங்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கென்யாவின் வனவிலங்கு பாதுகாப்பாளரும், வைல்ட் லைஃப் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவுலா தெரிவிக்கையில்,

இது மனித – வனவிலங்கு மோதலின் விளைவாகும். சிங்கம் கொல்லப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன். நாட்டில் வனவிலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

கென்யாவின் தென் பகுதியில் கடந்த வாரத்தில் மட்டும் 10 சிங்கங்கள் கொல்லப்பட்டுள்ளன. இவை அனைத்தும் உணவைத் தேடும் முயற்சியில் ஊருக்குள் சென்றதால் கிராம மக்களால் கொல்லப்பட்டதாக கென்யாவின் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

இன்று முதல் விக்டோரியா வானிலையில் ஏற்படப்போகும் பெரிய மாற்றம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் வெப்பநிலை குறைய ஆரம்பித்துள்ளதாகவும், நாட்டின் பல பகுதிகளில் நேற்று பதிவான அதிக வெப்பநிலை படிப்படியாக குறைவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம்...

சீனாவின் 15 நாள் இலவச விசா கொள்கையில் சேர்க்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியா

சீனாவால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒருதலைப்பட்சமான 15 நாள் இலவச விசாக் கொள்கையில் உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவும் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட...

10 மாதங்களில் ஆஸ்திரேலியாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு 200,000 டன் ஆட்டுக்குட்டி ஏற்றுமதி

ஆஸ்திரேலியா இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சுமார் 200,000 டன் ஆட்டுக்குட்டிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஆட்டு இறைச்சி ஏற்றுமதியில் 2024ம் ஆண்டு சாதனை...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

60% க்கும் கீழே குறைந்துள்ள Auction clearance Rate

கடந்த 8 மாதங்களில், மெல்பேர்ணின் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏல அனுமதி விகிதம் 60% க்கும் கீழே சரிந்துள்ளது. இத்தகைய பின்னணியில், அக்டோபரில் ஏல அனுமதி விகிதம்...

உலகின் 10 சிறந்த நகரங்களில் ஒன்றாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு நகரம்

டைம் அவுட் இதழால் வெளியிடப்பட்ட உலகின் 10 சிறந்த நகரங்களில் ஆஸ்திரேலியாவின் ஒரு நகரமும் சேர்க்கப்பட்டுள்ளது. கனேடிய சுற்றுலா மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை ஆலோசனை நிறுவனமான...