Newsகருக்கலைப்பு செய்த காதலிக்கு நேர்ந்த கதி - அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

கருக்கலைப்பு செய்த காதலிக்கு நேர்ந்த கதி – அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்

-

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த நபர் தனது கருக்கலைப்பு செய்த காதலியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

22 வயதான ஹரோல்டு தாம்ப்சன், 26 வயதான கேப்ரியல்லா கொன்சேல்ஸ்-ஐ கொலை செய்தார் என டல்லாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

டெக்சாசில் இருந்து சுமார் 800 மைல் தூரத்தில் அமைந்திருக்கும் கொலராடோவுக்கு பயணம் செய்த கொன்சேல்ஸ் அங்கு கருக்கலைப்பு செய்து கொண்டார். கொலராடோவில் கருவுற்ற பெண்கள், எந்த நிலையில் இருந்தாலும் கருக்கலைப்பு செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருக்கின்றது.

கருவுற்று ஆறு வாரங்கள் ஆனவர்கள், மருத்துவ அவசர நிலையின்றி தாமாக முன்வந்து கருக்கலைப்பு செய்வது டெக்சாஸ் மாகாணத்தில் சட்டரீதியில் குற்ற செயல் ஆகும். சம்பவத்தன்று கொன்சேல்ஸ்-ஐ சந்தித்த தாம்ப்சன் அவரிடம் சிறுது நேரம் பேசிக் கொண்டிருந்தார். 

பின் தாம்ப்சன், கொன்சேல்ஸ் கழுத்தை நெறிக்க தொடங்கியுள்ளார். கொன்சேல்ஸ் அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து நடந்து செல்ல முயன்றிருக்கிறார். 

அப்போது தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்த தாம்ப்சன் கொன்சேல்ஸ் தலையில் சுட்டார். ஏற்கனவே பல சமயங்களில் தாம்ப்சன் கொன்சேல்ஸ்-ஐ தாக்கி இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. 

குறித்த சம்பவத்தில் காதலியை கொலை செய்த தாம்ப்சனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நன்றி தமிழன்

Latest news

மூழ்கி வரும் சீனாவின் பல முக்கிய நகரங்கள்

சீனாவின் முக்கிய நகரங்களில் சுமார் 270 மில்லியன் மக்கள் மூழ்கும் நிலத்தில் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. மனித செயல்பாடு சீனாவின் முக்கிய நகரங்களில்...

ஆஸ்திரேலியாவில் உள்ள மனநல மருத்துவர்களின் வேண்டுகோள்

மனநல சேவை நிபுணர் பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு தலையிட வேண்டும் என மனநல மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம், 500க்கும் மேற்பட்ட மனநல மருத்துவர்கள்,...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதத்தில் 6600 பேர் வேலை இழந்த பிறகு, வேலையின்மை விகிதம் 3.7ல் இருந்து...

எறும்புகளால் $22 பில்லியன் செலவாகும் என அபாயம்

நெருப்பு எறும்புகளால் ஆஸ்திரேலியாவில் 2040 ஆம் ஆண்டில் $22 பில்லியன் செலவாகும் என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. இந்த எறும்புகள் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு பூச்சிகளில்...

மெல்போர்னைச் சுற்றி அதிக வீட்டுத் தேவை உள்ள பகுதிகள் அடையாளம்

மெல்போர்ன் பெருநகரில் அதிக வீட்டு தேவை உள்ள பகுதிகளை கண்டறிய புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, மெல்பேர்னின் 19 உள் பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஆய்வு...