ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் நேற்று தரம்சாலாவில் நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதின.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 213 ஓட்டங்கள் குவித்தது.
அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் டேவிட் வார்னர், 31 பந்துகளில் 46 ஓட்டங்களும், பிருத்வி ஷா 38 பந்துகளில் 54 ஓட்டங்களும் , விளாசி வலுவான அடித்தளம் அமைத்தனர். அதன்பின்னர் ரூசோ அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்கள் குவித்தார். பந்துகளை பவண்டரி, சிக்சர்களாக பறக்கவிட, அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
கடைசி வரை களத்தில் நின்ற ரூசோ, 37 பந்துகளில் 6 பவுண்டரி 6 சிக்சர் உட்பட 82 ஓட்டங்கள் குவித்தார். பில் சால்ட் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 214 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.இதில், அதிகபட்சமாக லியம் லிவிங்ஸ்டன் 48 ஓட்டங்களில் 94 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் விளையாடினார்.
தொடர்ந்து, அதர்வா டைட் 55 ஓட்டங்களும், பிரப்சிம்ரன் சிங் 22 ஓட்டங்களும், சாம் குரான் 11 ஓட்டங்களும், ஷாருக்கான் 6 ஓட்டங்களும் குவித்தனர்.
கடைசி ஓவரில் களமிறங்கிய ராகுல் சஹார் ஓட்டங்கள் எடுக்கவில்லை. இதன் முடிவில், பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 198 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை தழுவியது. இதனால் டெல்லி அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
நன்றி தமிழன்