Sportsதந்தைக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றிய சச்சின்

தந்தைக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றிய சச்சின்

-

புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்காததற்கு, தந்தைக்கு அளித்த வாக்குறுதியே காரணமென சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

புகையிலை பயன்பாட்டை குறைக்கவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் புகையிலை பொருட்கள் பயன்பாட்டால் ஆண்டுதோறும் 10 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் புற்றுநோய், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. புகைப்பவருக்கு அருகில் நிற்பவருக்கும் புகை பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வந்த போது, அப்போது தான் பாடசாலையில் இருந்து வந்திருந்தேன். பல விளம்பர வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனால் எனது தந்தை ஒருபோதும் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்த கூடாதென கூறினார். ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஒரு வாய்ப்பை கூடஏற்றதில்லை.

என் தந்தை ரமேஷ் டெண்டுல்கருக்கு என்னிடம், ‘நீ ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அப்போது ஏராளமானோர் உன்னை பின்பற்றுவர்’ என்றார். எனவே தான், புகையிலை அல்லது மது சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் நடிக்கவில்லை.

1990களில் எனது துடுப்பாட்ட மட்டையில் 2 ஆண்டுகள் ஸ்டிக்கர் இல்லை . என்னுடன் ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால் அணியில் இருந்த ஒவ்வொரு வீரரின் சிகரெட் விளம்பரம் இடம்பெற்றிருக்கும்.

என் தந்தைக்கு அளித்த வாக்குறுதி காரணமாக இந்த விளம்பரங்களுக்கு ஆதரவளிக்கவில்லை. எனது துடுப்பாட்ட மட்டையில் அவர்களது விளம்பரம் இடம்பெற பல சலுகைகளை அளித்தனர். ஆனால் அதற்கு ஒப்புகொண்டதில்லை. இந்த இரண்டு விஷயங்களில் இருந்து விலகி இருக்கிறேன். என் தந்தைக்கு அளித்த வாக்குறுதியை ஒருபோதும் மீறியதில்லை.- இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

தாய்லாந்தில் இறந்து கிடந்த 23 வயது ஆஸ்திரேலியர்

தாய்லாந்து ஹோட்டல் அறையில் வீடு திரும்புவதற்கு ஒரு நாள் முன்பு ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. உள்ளூர் செய்தி ஊடகமான 'Phuket News' படி,...

49 பேருடன் சென்ற ரஷ்ய விமானம் விபத்து

ரஷ்யாவின் தூர கிழக்கில் ஒரு விமானம் காணாமல் போன பின்னர் விபத்துக்குள்ளானது, இதில் 49 பேர் பயணித்துள்ளதாக நம்பப்படிகிறது. டிண்டா நகரத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள...

HESC கடன் நிவாரணம் குறித்து குரல் எழுப்பும் மாணவர்கள்

HECS கடன்களை 20 சதவீதம் குறைப்பதற்கான மசோதாவை தொழிலாளர் கட்சி நேற்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியது. கல்வி அமைச்சர் Jason Clare நேற்று நாடாளுமன்றத்தில் இந்த சட்டம் மூன்று...

சர்வதேச மாணவர்கள் வாடகை மற்றும் பணவீக்கத்தை உயர்த்தவில்லை – RBA

தொற்றுநோய்க்குப் பிறகு சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி, வாடகை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. RBA-வின்...

சர்வதேச மாணவர்கள் வாடகை மற்றும் பணவீக்கத்தை உயர்த்தவில்லை – RBA

தொற்றுநோய்க்குப் பிறகு சர்வதேச மாணவர் எண்ணிக்கையில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி, வாடகை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. RBA-வின்...

1,000 வேலை வெட்டுக்கு தயாராகும் NSW போக்குவரத்துத் துறை

ஒரு பெரிய நிறுவன மாற்ற முயற்சியின் ஒரு பகுதியாக, NSW-க்கான போக்குவரத்துத் துறை 1,000க்கும் மேற்பட்ட வேலைகளைக் குறைப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த முடிவு அதிகாரப்பூர்வமாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல்...