Sportsதந்தைக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றிய சச்சின்

தந்தைக்கு வழங்கிய வாக்குறுதியை காப்பாற்றிய சச்சின்

-

புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்காததற்கு, தந்தைக்கு அளித்த வாக்குறுதியே காரணமென சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

புகையிலை பயன்பாட்டை குறைக்கவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் மே 31ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் புகையிலை பொருட்கள் பயன்பாட்டால் ஆண்டுதோறும் 10 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். புகையிலை பயன்படுத்துவதால், நுரையீரல் புற்றுநோய், காசநோய், ஆஸ்துமா, மாரடைப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. புகைப்பவருக்கு அருகில் நிற்பவருக்கும் புகை பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் பேசியதாவது:-

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட வந்த போது, அப்போது தான் பாடசாலையில் இருந்து வந்திருந்தேன். பல விளம்பர வாய்ப்புகள் எனக்கு வந்தன. ஆனால் எனது தந்தை ஒருபோதும் புகையிலை பொருட்களை விளம்பரப்படுத்த கூடாதென கூறினார். ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஒரு வாய்ப்பை கூடஏற்றதில்லை.

என் தந்தை ரமேஷ் டெண்டுல்கருக்கு என்னிடம், ‘நீ ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அப்போது ஏராளமானோர் உன்னை பின்பற்றுவர்’ என்றார். எனவே தான், புகையிலை அல்லது மது சம்பந்தப்பட்ட விளம்பரத்தில் நடிக்கவில்லை.

1990களில் எனது துடுப்பாட்ட மட்டையில் 2 ஆண்டுகள் ஸ்டிக்கர் இல்லை . என்னுடன் ஒப்பந்தம் செய்யவில்லை. ஆனால் அணியில் இருந்த ஒவ்வொரு வீரரின் சிகரெட் விளம்பரம் இடம்பெற்றிருக்கும்.

என் தந்தைக்கு அளித்த வாக்குறுதி காரணமாக இந்த விளம்பரங்களுக்கு ஆதரவளிக்கவில்லை. எனது துடுப்பாட்ட மட்டையில் அவர்களது விளம்பரம் இடம்பெற பல சலுகைகளை அளித்தனர். ஆனால் அதற்கு ஒப்புகொண்டதில்லை. இந்த இரண்டு விஷயங்களில் இருந்து விலகி இருக்கிறேன். என் தந்தைக்கு அளித்த வாக்குறுதியை ஒருபோதும் மீறியதில்லை.- இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியா உட்பட பல மாநிலங்களில் திரும்பப்பெறப்படும் வயின்

ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் விற்கப்படும் ஒரு வகை சிவப்பு வயின் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இந்த வகை வயின் குடித்த பிறகு ஒவ்வாமை...

வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட டிரம்ப் – அதிபர் வேட்பாளராக முன்மொழிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்மொழியப்பட்டுள்ளார். குடியரசுக் கட்சி மாநாட்டில் இணைந்த பிரதிநிதிகளின் உடன்பாட்டின் பின்னரே...

வங்கிகளில் தன்னிச்சையாக வசூலிக்கப்பட்ட பணத்தை திருப்பி வழங்க நடவடிக்கை

அவுஸ்திரேலியாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வங்கிக் கணக்குகளில் இருந்து தன்னிச்சையாக வசூலிக்கப்பட்ட 28 மில்லியன் டொலர்களை திருப்பி வழங்க அந்த வங்கிகள் நடவடிக்கை எடுத்துள்ளன. பல்வேறு சேவைகளுக்காக...

டொனால்ட் ட்ரம்ப் சுடப்பட்டதையடுத்து பாதுகாப்பு கேட்டுள்ள ஆஸ்திரேலிய அரசியல்வாதிகள்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சிக்குப் பின்னர், அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளுமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. உள்நாட்டு விவகார அமைச்சர் ஜிம்...