Newsஅழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த நபர் - அதிர்ச்சியில்...

அழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த நபர் – அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

-

பிரேசில் நாட்டில் மிஸ் பிரேசில் அழகி போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது. 

பல்வேறு கட்டங்களாக நடந்த தேர்வுகளின் அடிப்படையில் நதாலி பெக்கர் மற்றும் எமானுவெலி பெலினி ஆகிய 2 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். 

இதைதொடர்ந்து வெற்றியாளரை அறிவிப்பதற்காக 2 பேரும் மேடை ஏற்றப்பட்டனர். பின்னர் போட்டியில் பெலினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு கிரீடம் சூட்டப்பட இருந்தது. 

அப்போது போட்டியில் 2-ம் இடம் பிடித்த நதாலியின் கணவர் திடீரென மேடை ஏறினார். அவர் பெலினிக்கு சூட்டப்பட இருந்த கிரீடத்தை பறித்து தரையில் வீசி உடைத்தார். 

கீழே விழுந்த கிரீடத்தை மீண்டும் எடுத்து மறுபடியும் தரையில் அடித்து உடைத்தார். இதனால் அந்த கிரீடம் துண்டுதுண்டாக உடைந்தது. 

இதைப்பார்த்த நடுவர்கள், விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

விழா ஏற்பாட்டாளர்கள் ஓடி வந்து அவரை மேடையில் இருந்து கீழே இறக்கினர். 

அப்போது நதாலியின் கணவர் தெரிவிக்கையில் ,

நடுவர்கள் சரியான தீர்ப்பை வழங்கவில்லை. எனவே தான் கோபத்தில் இவ்வாறு செய்தேன் என்றார். ஆனால் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தான் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

இந்த சம்பவத்தை பார்வையாளர் ஒருவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Latest news

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்திய Microsoft

பாகிஸ்தானில் அனைத்து செயல்பாடுகளையும் Microsoft நிறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகப்பெரிய வேலைக் குறைப்புகளில் Microsoft தனது ஊழியர்களில் 4% பேரை பணிநீக்கம் செய்யும் என்று...

கிரேக்கத்திற்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிரேக்கத்திற்குச் செல்லத் திட்டமிடும் குடிமக்களுக்கு ஆஸ்திரேலியா கடுமையான பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதிகரித்து வரும் விபத்துகளின் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 40°C க்கும் அதிகமான வெப்பநிலை, எதிர்பாராத...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...

டிரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு ஹமாஸின் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளன. பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்தும்...

ஒரு மாதமாக இறந்த உடல்களுடன் வாழ்ந்த சிட்னி பெண்

சிட்னியைச் சேர்ந்த ஒரு பெண் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இரண்டு இறந்த உடல்களுடன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சிட்னியின் சர்ரி ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த...

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...