News பொழுதுபோக்கிற்காக தினமும் இலட்ச கணக்கில் செலவு செய்யும் டுபாய் பெண்

பொழுதுபோக்கிற்காக தினமும் இலட்ச கணக்கில் செலவு செய்யும் டுபாய் பெண்

-

இங்கிலாந்து நாட்டின் சசெக்ஸ் நகரில் பிறந்தவர் சௌதி. இவர் தனது 6 வயதில் டுபாய் நாட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

அப்போது அவருக்கும், சவுதி அரேபியா நாட்டை சேர்ந்த ஜமால் பின் நடக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறி அவரையே திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தற்போது அவர்கள் கற்பனைக்கு எட்டாத ஆடம்பரமான வாழ்க்கை முறையில் ஒன்றாக உலகம் சுற்றி வருகிறார்கள்.

கோடீஸ்வர குடும்பத்தில் பிறந்த சௌதியின் விருப்பம் பொழுதுபோக்கு ஒன்று மட்டுமே. இதற்காக அவர் நாள் ஒன்றுக்கு ரூ.70 லட்சம் வரை செலவு செய்கிறார். ஷாப்பிங் செல்வதில் அதிக நாட்டம் கொண்ட சௌதி விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது, ஊர் சுற்றுவது என கழித்து வருகிறார்.

அதனை ஊக்குவிக்கும் வகையில் கடன் அட்டை வழங்கும் நிறுவனங்களும் உங்கள் ஷோப்பிங்கிற்கு வானமே உச்சம் என்று தெரிவித்துள்ளது.

துபாயைச் சேர்ந்த இந்த இல்லத்தரசி, ஷோப்பிங், உணவு, பயணம் என ஆடம்பரமாக செலவு செய்வதை இன்றளவும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான பின் தொடர்பாளர்கள் இவருக்கு பின்னால் இருக்கிறார்கள்.

சௌதியும் அவரது கணவரும் கவர்ச்சியான மற்றும் ஆடம்பரமான முறையில் விடுமுறை நாட்களில் ஒன்றாகப் பயணம் செய்து வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை எப்போது குறையும்?

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலை குறைவதை அடுத்த வருட ஆரம்பம் வரை எதிர்பார்க்க முடியாது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வேகமாக குறைந்து வரும் வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில்...

பெர்த் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் சில வாரங்களில் புதிய தோற்றத்தைப் பெறும்

பெர்த் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் சில வாரங்களில் மொபைல் போன் மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்த முடியும். இது...

முட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

முட்டை தேவையை பூர்த்தி செய்ய முட்டை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை...

ஆஸ்திரேலியாவில் முலாம்பழம் விலை உயர்வு – பெர்ரி விலை குறைவு

கோடை சீசனில் ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பழமாக இருக்கும் இனிப்பு முலாம்பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோல்ஸில் விற்கப்படும்...

கடைசி உயில் சட்டங்களை கடுமையாக்கும் குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், இறந்தவர்களின் வாரிசுரிமையை குழந்தைகளுக்கு மாற்றுவது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.