Sportsதிருமண பந்தத்தில் இணைந்த ருத்துராஜ் கெய்க்வாட் - ரசிகர்கள் வாழ்த்து

திருமண பந்தத்தில் இணைந்த ருத்துராஜ் கெய்க்வாட் – ரசிகர்கள் வாழ்த்து

-

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் இவர், தனது அதிரடி ஆட்டம் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆதரவை பெற்றுள்ளார்.

சென்னை அணியின் அணித்தலைவர் எம்.எஸ். டோனியின் நம்பிக்கைக்குரிய ஒரு வீரராக திகழ்கிறார்.

ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைத்தது.

7 ஆம் திகதி தொடங்கும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் பேக்அப் தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் திருமணம் செய்ய இருப்பதால், கலந்து கொள்ள முடியாது என்று பிசிசிஐ-யிடம் கேட்டுக் கொண்டார்.

பிசிசிஐ-யும் அனுமதி அளித்தது. இந்த நிலையில் நேற்று ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு திருமணம் நடைபெற்றது.

உட்கர்ஷா பவார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். உட்கர்ஸ பவார் கிரிக்கெட் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

Depression தொடர்பில் நடத்தப்பட்ட மிகப்பெரிய மரபணு ஆய்வு

மனச்சோர்வு குறித்த உலகின் மிகப்பெரிய மரபணு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் குயின்ஸ்லாந்து மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (QIMR) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் குழு இதனைக் கூறியுள்ளது. இங்கு,...

Coles கடைகளில் இன்று முதல் கத்தி விற்பனைக்கு தடை

ஆஸ்திரேலியாவின் பிரபல பல்பொருள் அங்காடியான Coles-இல் இனி கத்தி விற்பனையை நிறுத்தியுள்ளது. 13 வயது சிறுவன் ஊழியர் ஒருவரை குத்தியதை அடுத்து நாடு முழுவதும் உள்ள Coles...

சர்வதேச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக மாற ஆஸ்திரேலியாவிடமிருந்து ஒரு புதிய திட்டம்

சர்வதேச தலையீடுகளில் இருந்து சுதந்திரமாக இருக்க ஆஸ்திரேலிய அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. வெளிநாட்டு தாக்கங்கள் காரணமாக அவுஸ்திரேலியாவின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் தேசிய நலன்கள் அச்சுறுத்தலுக்கு...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...

சர்வதேச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக மாற ஆஸ்திரேலியாவிடமிருந்து ஒரு புதிய திட்டம்

சர்வதேச தலையீடுகளில் இருந்து சுதந்திரமாக இருக்க ஆஸ்திரேலிய அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. வெளிநாட்டு தாக்கங்கள் காரணமாக அவுஸ்திரேலியாவின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் தேசிய நலன்கள் அச்சுறுத்தலுக்கு...

ரத்து செய்யப்பட்டுள்ள பல சிட்னி ரயில் சேவைகள்

சிட்னி ரயில் சேவையில் பல பிரச்சனைகள் எழுந்துள்ள நிலையில் 15ஆம் திகதி காலை மட்டும் சிட்னி ரயில் சேவைகளில் 80% ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிட்னியில் இயக்கப்படும்...