Newsஉடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

-

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கான ஒரு போட்டியையும் நடத்த இருக்கிறது சுவீடன்.

அதற்கு ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப் என பெயரிட்டுள்ள சுவீடன், உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை பெற்றுள்ளது.

இந்தப் போட்டி எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் நடத்தப்பட உள்ளது. பல வாரங்கள் இந்த போட்டி நடத்தப்படும் எனத் தெரிகிறது. மேலும், இதில் பங்கேற்கும் நபர்கள் தினமும் 6 மணி நேரம் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. துணையை கவர்தல், உடல் மசாஜ், வாய்வழி பாலியல், உடலுறவு, சகிப்புத்தன்மை என 16 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட இருக்கிறது.

இந்த போட்டியை நடத்த சுவீடன் செக்ஸ் பெடரேஷன் ஏற்பாடு செய்துள்ளது. 70 சதவீதம் வாக்குகள் பார்வையாளர்கள் அளிப்பார்கள். 30 சதவீதம் வாக்குகள் நடுவர்கள் அளிப்பார்கள். இந்த போட்டியில் கலந்து ஐரோப்பியாவின் பல நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சுவீடனின் அந்த அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலர் எதிர்ப்பு கருத்துகளையும், சிலர் ஆதரவான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

நன்றி தமிழன்

Latest news

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

பிரபலமான கோல்ட் கோஸ்ட் பூங்காவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்லீ ஹெட்ஸ் தேசிய பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 38 வயது பெண் ஒருவர், அடையாளம் தெரியாத ஒருவரால்...