பிரான்சில் சிறுவன் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திரைபிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரும் வருத்தமும், கண்டனமும் தெரிவித்தனர்.
போராட்டம் வன்முறையாக மாறியதில், பாடசாலைகள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளன என அந்நாட்டு உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மனின் அவரது ட்விட்டர் செய்தியில் வெளியிட்டுள்ளார்.
பாரிசில் வன்முறை பரவியதில், 40 கார்கள் தீக்கிரையாகியுள்ளன. 170 பொலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் 40 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் அவரது மனைவி பிரிகிட் உடன் பாரிஸ் நகரில் அக்கார் அரீனா பகுதியில் நடந்த 75 வயதுடைய எல்டன் ஜான் என்ற இங்கிலாந்து பாடகரின் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அவர் பாடலுக்கு ஏற்ப, நடனம் ஆடினார். ஒருபுறம் பொலிஸாருக்கு எதிராக பிரான்சில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மறுபுறம் ஜனாதிபதி மேக்ரான் அவரது மனைவியுடன் இசை கச்சேரியில் கைத்தட்டி, நடனம் ஆடியதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.