Newsவெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு - அமெரிக்காவில் பரபரப்பு

வெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு – அமெரிக்காவில் பரபரப்பு

-

அமெரிக்காவின் ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகை, உச்சகட்ட பாதுகாப்பை கொண்டுள்ள கட்டிடமாகும். அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகள், நேற்று இரவு சுமார் 8.45 மணியளவில் வெள்ளை மாளிகை வளாகத்தின் மேற்கு பகுதியில் பவுடர் போன்ற பொருளை கண்டுபிடித்துள்ளனர்.

இதனால் வெள்ளை மாளிகையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தாக்குதலுக்கான வேலையாக இருக்கலாம் என்று வெள்ளை மாளிகையில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.

குறித்த சமயத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை. முன் எச்சரிக்கையாக வெள்ளை மாளிகை வளாகம் தற்காலிகமாக மூடப்பட்டது.

இதையடுத்து உயர் அதிகாரிகள், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்தனர். அந்த மர்ம பொருள் அபாயகரமானதல்ல என்று தீயணைப்பு துறை உறுதிப்படுத்தியது.

பின்னர் அந்த மர்ம பொருள், பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதில் அது கோகெய்ன் போதை பொருள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பலத்த பாதுகாப்பு உள்ள வெள்ளை மாளிகைக்குள் போதைப் பொருள் எப்படி நுழைந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest news

சிறந்த விமானக் குழுவிற்கான முதல் இடம் ஆஸ்திரியாவுக்கு செல்கிறது

ஐரோப்பாவின் சிறந்த விமானக் குழு தரவரிசையில் ஆஸ்திரியாவின் விமானப் பணியாளர்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர். இந்த தரவரிசை 2023 ஆம் ஆண்டிற்கான செய்யப்பட்டது மற்றும் ஏர் பிரான்ஸ்...

உங்கள் வீட்டில் கல்நார் இருந்தால் அவதானமாக இருங்கள்

நாட்டில் வீடுகள் மற்றும் கட்டிடங்களை நிர்மாணிப்பதில் கல்நார் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தாலும், ஒவ்வொரு மூன்றாவது வீட்டிற்கும் கல்நார் இன்னும் பயன்படுத்தப்படுகிறது என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கல்நார் ஒழிப்பு கவுன்சிலின்...

வட்டி விகித உயர்வு அபாயம் பற்றி அறிக்கை

கடந்த வாரம் சமர்ப்பிக்கப்பட்ட மத்திய அரசின் வரவு செலவுத் திட்டமானது வட்டி விகிதத்தை அதிகரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என பல அவுஸ்திரேலியர்கள் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பட்ஜெட் சிறப்பாக...

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபரின் இறுதிச்சடங்கு இன்று

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற உள்ளன. விபத்தில் உயிரிழந்த அதிபர் உள்ளிட்டோருக்கு 5 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்...