உலகம் கொரோனா தொற்றுநோயில் இருந்து தற்போது வெளிவந்திருப்பதாக எண்ணி சற்று ஆசுவாசம் அடைந்திருக்கிறது. ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிக்கிறது.
அபுதாபியில் MERS-CoV என்ற மிகவும் ஆபத்தான தொற்றுவகையின் பாதிப்பு நேற்று (ஜூலை 24 ஆம் திகதி) பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, கடந்த மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இளைஞர் ஒருவருக்கு, Middle East Respiratory Syndrome – Coronavirus (MERS-CoV) என்ற கொடிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இது கோவிட்-19 தொற்றை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.