Newsநாசாவில் மின்தடையால் விண்வெளி வீரர்களுடனான தொடர்பு துண்டிப்பு

நாசாவில் மின்தடையால் விண்வெளி வீரர்களுடனான தொடர்பு துண்டிப்பு

-

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்று (25) திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விண்வெளி மையம், விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பின்னர் பேக்அப் கன்ட்ரோல் சிஸ்டம் மூலம் விண்வெளி மையத்துடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.

மின்தடையால் சுமார் 90 நிமிடங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நாசாவில் ஏற்பட்ட தடை குறித்து ரஷ்யாவின் தகவல் தொடர்பு அமைப்பு மூலமாக 20 நிமிடத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளி மையத்துடன் தொடர்பு கொள்ள நாசாவில் தனியாக கட்டுப்பாட்டு மையம் உள்ளது. இந்த மையம் வேலை செய்யவில்லை என்றால், இதற்கு மாற்று திட்டம் வகுத்துள்ளது.

முதன்முறையாக விண்வெளி மையத்தை தொடர்பு கொள்ள நாசா இந்த மாற்று ஏற்பாட்டை பயன்படுத்தியுள்ளது.

இயற்கை பேரழிவு எற்பட்டால் மாற்று ஏற்பாட்டிற்காக ஹூஸ்டனில் இருந்து சில மைல் தூரத்தில் மாற்று கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து பராமரித்து வருகிறது.

ஆனால் தற்போது விளக்குகள் மற்றும் ஏ.சி. வேலை செய்ததால் நாசா மையத்தில் இருந்தே தொடர்பு கொண்டுள்ளது.

இது குறித்து விண்வெளி நிலைய திட்ட மேலாளர் ஜோல் தெரிவிக்கையில்,

”விண்வெளி வீரர்களுக்கோ, நிலையத்திற்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டி வருகிறது.

இதற்கான விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளன. அவர்கள் விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Latest news

செல்போனுக்காக இரு பெரிய பாறைகளின் நடுவே சிக்கிக்கொண்ட பெண்

அவுஸ்திரேலியாவில் இரண்டு பெரிய பாறைகளுக்கு இடையே பல மணி நேரமாக சிக்கி கொண்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸின் Hunter பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள...

இஸ்ரேலில் ரொக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

கடந்த 19 ஆம் திகதி இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இல்லம் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ட்ரோன் தாக்குதல்...

விக்டோரியாவில் வீட்டுக் கடன் வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி

ஆஸ்திரேலியர்களின் அடமான மன அழுத்தம் 2 சதவீதம் குறைந்துள்ளதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அறிக்கைகளின்படி, வீட்டுக் கடன் பெற்ற ஆஸ்திரேலியர்களில் 28.3 சதவீதம் பேர் தற்போது அடமான...

இன்னும் முன்வராத $8 மில்லியன் வெற்றியாளர்

Oz Lotto லாட்டரி டிராவில் $8 மில்லியன் வென்றவர் தனது வெற்றியைப் பெற இன்னும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேள்விக்குரிய வெற்றியாளர் மெல்பேர்ணில் வசிப்பவர் மற்றும் அக்டோபர்...

இன்னும் முன்வராத $8 மில்லியன் வெற்றியாளர்

Oz Lotto லாட்டரி டிராவில் $8 மில்லியன் வென்றவர் தனது வெற்றியைப் பெற இன்னும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கேள்விக்குரிய வெற்றியாளர் மெல்பேர்ணில் வசிப்பவர் மற்றும் அக்டோபர்...

3 நிமிடங்கள் மட்டுமே முத்தமிட வேண்டும் – சர்வதேச விமான நிலையத்தின் அறிவிப்பு

நியூசிலாந்தின் டுனெடின் விமான நிலையத்தில் பிக் அப் மற்றும் டிராப் பகுதிகளில் முத்தமிடும் நேரத்தை மூன்று நிமிடங்கள் மட்டுமே கொண்டுள்ளது. விமான நிலைய வளாகத்தில் இது தொடர்பான...