Newsநாசாவில் மின்தடையால் விண்வெளி வீரர்களுடனான தொடர்பு துண்டிப்பு

நாசாவில் மின்தடையால் விண்வெளி வீரர்களுடனான தொடர்பு துண்டிப்பு

-

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவில் நேற்று (25) திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக விண்வெளி மையம், விண்வெளி வீரர்கள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பின்னர் பேக்அப் கன்ட்ரோல் சிஸ்டம் மூலம் விண்வெளி மையத்துடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.

மின்தடையால் சுமார் 90 நிமிடங்கள் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நாசாவில் ஏற்பட்ட தடை குறித்து ரஷ்யாவின் தகவல் தொடர்பு அமைப்பு மூலமாக 20 நிமிடத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

விண்வெளி வீரர்கள் மற்றும் விண்வெளி மையத்துடன் தொடர்பு கொள்ள நாசாவில் தனியாக கட்டுப்பாட்டு மையம் உள்ளது. இந்த மையம் வேலை செய்யவில்லை என்றால், இதற்கு மாற்று திட்டம் வகுத்துள்ளது.

முதன்முறையாக விண்வெளி மையத்தை தொடர்பு கொள்ள நாசா இந்த மாற்று ஏற்பாட்டை பயன்படுத்தியுள்ளது.

இயற்கை பேரழிவு எற்பட்டால் மாற்று ஏற்பாட்டிற்காக ஹூஸ்டனில் இருந்து சில மைல் தூரத்தில் மாற்று கட்டுப்பாட்டு மையத்தை அமைத்து பராமரித்து வருகிறது.

ஆனால் தற்போது விளக்குகள் மற்றும் ஏ.சி. வேலை செய்ததால் நாசா மையத்தில் இருந்தே தொடர்பு கொண்டுள்ளது.

இது குறித்து விண்வெளி நிலைய திட்ட மேலாளர் ஜோல் தெரிவிக்கையில்,

”விண்வெளி வீரர்களுக்கோ, நிலையத்திற்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டி வருகிறது.

இதற்கான விண்வெளி வீரர்களை அனுப்பியுள்ளன. அவர்கள் விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Latest news

விக்டோரியாவில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்கள்

விக்டோரியாவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை கடுமையாக தாக்கியதற்காக நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண்டிகோவில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டரில் ஒன்பது இளைஞர்கள் கொண்ட குழு ஒன்று...

ஆஸ்திரேலிய பங்குச் சந்தையில் கடுமையான சரிவு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை நேற்று கடுமையாக சரிந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரிகள் அமல்படுத்தப்படும் என்று உறுதி செய்ததை அடுத்து இந்த சரிவு ஏற்பட்டதாக ஊடக...

ஆஸ்திரேலியாவில் பெண்களா அல்லது ஆண்களா அதிக எடை கொண்டவர்?

2050 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய குழந்தைகளில் பாதி பேர் உடல் பருமனாக இருப்பார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வை மெல்பேர்ணில் உள்ள முர்டோக் குழந்தைகள்...

உக்ரைன் உதவி கேட்கவில்லை, கேட்டால் உதவி வழங்கும் – பிரதமர் அல்பானீஸ்

உக்ரைன் கேட்டுக் கொண்டால், அமைதி காக்கும் படைகளை அனுப்புவது குறித்து பரிசீலிப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி...