Cinemaபிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து காலமானார்

பிரபல நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து காலமானார்

-

தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வரும் பிரபல நடிகரான மாரிமுத்து ‘எதிர் நீச்சல்’ என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானார்.

இதில் இவர் பேசும் ‘அட எம்மா ஏய்’ வசனம் பட்டி தொட்டி எங்கும் பரவியுள்ளது.

இவர் இயக்குனர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு ‘கண்ணும் கண்ணும்’ 2014-ஆம் ஆண்டு ‘புலிவால்’ உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார்.

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘யுத்தம்’ செய் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.

இந்நிலையில், நடிகர் மாரிமுத்து (58) இன்று காலை மாரடைப்பால் காலமானார். அதாவது, ‘எதிர் நீச்சல்’ தொடரின் டப்பிங் பேசிக்கொண்டிருந்த திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.

இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவருக்கு பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் மாரிமுத்துவின் உடல் இன்று மாலை வரை சென்னையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று இரவு அவரது சொந்த ஊரான மதுரை, தேனி மாவட்டம் வருச நாட்டுக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அங்கு இவரது இறுதி சடங்குகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

ஆஸ்திரேலியாவிலிருந்து உக்ரைனுக்கு மற்றொரு $100 மில்லியன் இராணுவ உதவிப் பொதி

ஆஸ்திரேலியா உக்ரைனுக்கு 100 மில்லியன் டாலர் இராணுவ உதவிப் பொதியை அறிவித்துள்ளது. துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் உக்ரைனுக்கு ஒரு குறுகிய பயணத்தின் போது...

அதிக வரி விகிதம் கொண்ட வளர்ந்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும்

கடந்த ஆண்டு வரி உயர்வால் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு கூறுகிறது. வளர்ந்த நாடுகளில் அதிக வரி விதிக்கும்...

பிரசவத்திற்கான ஆஸ்திரேலியாவின் சிறந்த மருத்துவமனைகள் பற்றிய ஆய்வு

ஆஸ்திரேலியாவில் சராசரி டெலிவரிக்கு குறைந்தபட்சம் $726 செலவாகும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பிரசவத்திற்கு அரசு அல்லது தனியார் மருத்துவமனைகள் சிறந்ததா என 1000 பெண்களிடம் ஃபைண்டர்...

ஆஸ்திரேலியாவில் சவாலாக மாறியுள்ள சமூக ஊடகங்கள்

குடும்ப வன்முறை முதல் பயங்கரவாதம் மற்றும் போர் அனைத்தையும் இணைக்கும் சமூக ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் சவாலான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் ஒரு...

ஆஸ்திரேலியாவில் சவாலாக மாறியுள்ள சமூக ஊடகங்கள்

குடும்ப வன்முறை முதல் பயங்கரவாதம் மற்றும் போர் அனைத்தையும் இணைக்கும் சமூக ஊடகங்கள் ஆஸ்திரேலியாவில் மிகவும் சவாலான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியுள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்கள் ஒரு...

சுட்டுக் கொல்லப்பட்ட Tiktok நட்சத்திரம்

ஈராக் சமூக ஊடக ஆர்வலரான ஓம் ஃபஹத் என்ற இளம் பெண் பாக்தாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈராக் உள்துறை அமைச்சகம் ஒரு...