Newsதமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 புதிய வகை கொரோனா

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 புதிய வகை கொரோனா

-

ஒமைக்ரானின் உட்பிரிவான எக்ஸ்பிபி வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த 2 புதிய கொரோனா வைரஸ் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸில் இருந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் எக்ஸ்பிபி எனும் புதிய வகை வைரஸ் உருவானது. அன்று முதல், ஜனவரி மாதம் வரை இந்த வைரஸ் தொற்றால், 21,979 பேர் பாதிக்கப்பட்டனர். பொது சுகாதாரத்துறை மரபணு பகுப்பாய்வு கூடத்தில், கொரோனா உருமாற்றம் தொடர்பான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

2 புதிய கொரோனா உருமாற்றம் : இதில்இ கடந்த ஆண்டு செப்டம்பர் தொடக்கம் 2023 ஜனவரி வரை 2,085 பேரின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 420 மாதிரிகளில் எக்ஸ்பிபி வகை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதில் 98 மாதிரிகள் விரிவான நுண் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் உலகில் இதுவரை எங்கும் கண்டறியப்படாத, 2 புதிய கொரோனா உருமாற்றங்களை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இது தொடர்பான ஆய்வுக் கட்டுரையை பொது சுகாதாரத்துறை சமர்ப்பித்தது. அந்த கட்டுரையை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த லான்செட் இதழ் 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சிவதாஸ் ராஜூ கூறியதாவது:

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று: தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியிலும் நடப்பாண்டு தொடக்கத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் தடுப்பூசிகளை முறையாக செலுத்தியவர்கள். இவர்களில் தீவிர கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் உலகில் வேறெங்கும் பதிவாகாத 2 புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளால் எக்ஸ்பிபி உருமாற்றத்தை தடுக்க முடியாது என்பதை அந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளோம்.

புதிய உருமாற்றங்கள் கண்டறியப்பட்டாலும், தற்போது கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் இது குறித்த அச்சம் தேவையில்லை. கொரோனா போன்ற பிற வைரஸ் தொற்றுகளையும் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

பிரான்ஸ் Louvre கொள்ளை தொடர்பாக ஐந்து புதிய சந்தேக நபர்கள் கைது

இந்த மாதம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் நடந்த நகை திருட்டு தொடர்பாக பிரெஞ்சு போலீசார் ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர். அதில் ஒரு முக்கிய சந்தேக நபரும்...

WA நகரில் சந்தேகத்திற்கிடமாக இறந்து கிடந்த குழந்தை!

மேற்கு ஆஸ்திரேலிய நகரத்தில் ஒரு குழந்தையின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பெர்த்திலிருந்து சுமார் 40 கி.மீ தெற்கே உள்ள பால்டிவிஸில் உள்ள ஒரு...

அமெரிக்காவில் அணு ஆயுத சோதனைக்கு உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அணு ஆயுதங்களை பரிசோதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் கொரியாவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சற்று முன்பு, அமெரிக்க அதிபர்...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

“Furlong” என்ற சிறப்பு நடவடிக்கையைத் தொடங்கும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியன் சாலைகளில் நேருக்கு நேர் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு...

சர்வதேச தரகராக அமெரிக்க நீதிமன்றத்தை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியர்

39 வயதான ஆஸ்திரேலியரான பீட்டர் வில்லியம்ஸ், ரஷ்யாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ரகசியங்களை விற்ற குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. குற்றச்சாட்டுகளின்படி, வில்லியம்ஸ் ஒரு அமெரிக்க பாதுகாப்பு...