Newsதமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 புதிய வகை கொரோனா

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 புதிய வகை கொரோனா

-

ஒமைக்ரானின் உட்பிரிவான எக்ஸ்பிபி வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்த 2 புதிய கொரோனா வைரஸ் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரஸில் இருந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் எக்ஸ்பிபி எனும் புதிய வகை வைரஸ் உருவானது. அன்று முதல், ஜனவரி மாதம் வரை இந்த வைரஸ் தொற்றால், 21,979 பேர் பாதிக்கப்பட்டனர். பொது சுகாதாரத்துறை மரபணு பகுப்பாய்வு கூடத்தில், கொரோனா உருமாற்றம் தொடர்பான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

2 புதிய கொரோனா உருமாற்றம் : இதில்இ கடந்த ஆண்டு செப்டம்பர் தொடக்கம் 2023 ஜனவரி வரை 2,085 பேரின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 420 மாதிரிகளில் எக்ஸ்பிபி வகை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதில் 98 மாதிரிகள் விரிவான நுண் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் உலகில் இதுவரை எங்கும் கண்டறியப்படாத, 2 புதிய கொரோனா உருமாற்றங்களை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இது தொடர்பான ஆய்வுக் கட்டுரையை பொது சுகாதாரத்துறை சமர்ப்பித்தது. அந்த கட்டுரையை சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த லான்செட் இதழ் 2 நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சிவதாஸ் ராஜூ கூறியதாவது:

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தொற்று: தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியிலும் நடப்பாண்டு தொடக்கத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 81 சதவீதம் பேர் தடுப்பூசிகளை முறையாக செலுத்தியவர்கள். இவர்களில் தீவிர கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இதில் உலகில் வேறெங்கும் பதிவாகாத 2 புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளால் எக்ஸ்பிபி உருமாற்றத்தை தடுக்க முடியாது என்பதை அந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளோம்.

புதிய உருமாற்றங்கள் கண்டறியப்பட்டாலும், தற்போது கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் இது குறித்த அச்சம் தேவையில்லை. கொரோனா போன்ற பிற வைரஸ் தொற்றுகளையும் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அந்த ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியாவில் அறிமுகமாகும் புதிய வேலை வாய்ப்புகள்

விக்டோரியா மாநிலத்தில் 10 ஆண்டுகளில் 8 லட்சம் புதிய வீடுகள் கட்டுவது தொடர்பான வணிகத்திற்கான புதிய ஆட்சேர்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விக்டோரியா மாகாணத்தில் நிலவும் வீட்டு நெருக்கடிக்கு...

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உள்ள இன்னொரு நிவாரணம்

குழந்தை பிறக்கும் பட்சத்தில் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு மற்றும் மருத்துவ சேவைக்காக நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் பில்லியன் டாலர்கள் பெறப்படும்...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் புதிய சட்டம்

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடைசெய்யும் திட்டத்தை ஏற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடைசெய்யும் ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற முதல் சட்டத்தை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும்...