Newsஅடுத்த வேளை சாப்பிடுவோமா என்பதே 70 கோடி பேருக்கு தெரியாது -...

அடுத்த வேளை சாப்பிடுவோமா என்பதே 70 கோடி பேருக்கு தெரியாது – ஐ.நா அறிக்கை

-

உலகளவில், பசி, பட்டினி காரணமாக, சுமார் 70 கோடி பேருக்கு அடுத்த வேளை உணவு எப்போது கிடைக்கும் அல்லது அடுத்த வேளை உணவை சாப்பிடுவோமா என்பதே தெரியாது என ஐ.நா.வின் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக உணவு திட்ட செயற்திட்ட பணிப்பாளர் இயக்குநர் சிண்டி மெக்கெய்ன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் பேசுகையில் கூறியதாவது ,

நிதிப்பற்றாக்குறை காரணமாக, ஏழை மக்களுக்கு வழங்கப்படும் இலவச உணவு தானியங்கள் குறைக்கப்படுகின்றன. மேலும் இது அதிகரித்துக்கொண்டே போகிறது.

நாம் இப்போது வாழ்ந்துகொண்டிருப்பது, தொடர்ச்சியான மற்றும் நீண்ட கால நெருக்கடிகளால், உலகளாவிய மனிதாபிமானத் தேவைகளைத் தொடர்ந்து குறைத்துக்கொண்டே இருக்கும் சூழ்நிலை உள்ளது என்று அவர் கூறினார்.

இது மனிதாபிமான சமூகத்தின் புதிய யதார்த்தம் – நமது புதிய இயல்பு – மேலும் பல ஆண்டுகளாக இதுபோன்ற வீழ்ச்சியை கையாண்டுவருகிறோம் என்றார்.

மேலும், ரோம் நகரை மையமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று , 79 நாடுகளில் உலக உணவு திட்டத்தின் கீழ் நடத்திய மதிப்பீட்டின்படி, 78.3 கோடி மக்கள் – உலக மக்கள் தொகையில் 10 பேரில் ஒருவர் – இன்னும் ஒவ்வொரு இரவும் பசியுடன் தான் உறங்கச் செல்கிறார்கள். இந்த ஆண்டு 34.5 கோடிக்கும் அதிகமான மக்கள் அதிக அளவு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர், இது கொவிட்-19 தொற்றுநோய்க்கு முன்னர் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து கிட்டத்தட்ட 20 கோடி மக்களாக இருந்தது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது, ஆண்டுதோறும் அதிகரிக்க, போர், பொருளாதார பாதிப்பு, பருவநிலை பாதிப்பு உள்ளிட்டவையும் பெரும்பங்காற்றுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

தனது சேவையை நிறுத்திய Skype

Skype ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய பிறகு அதன் வீடியோ அழைப்பு சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளது. Microsoft 2011 ஆம் ஆண்டு ஸ்கைப்பை 8.5 பில்லியன் டாலருக்கு...

மனித மூளையை கொல்லும் டிஜிட்டல் திரை – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஒரு நாளைக்கு அதிக நேரம் டிஜிட்டல் திரைகளில் செலவிடுவது ஒரு நபரின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. இது மூளையின் செயல்பாடு...

விக்டோரியாவில் ரத்து செய்யப்படும் அபாயத்தில் உள்ள பிரபலமான இசை விழா

விக்டோரியா மக்களிடையே பிரபலமான இசை விழாவாகக் கருதப்படும் "Esoteric Music Festival" நடத்துவது தொடர்பாக பல சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த முறை மார்ச் 7 முதல் 11...

விக்டோரியர்களுக்கு எதிர்காலத்தில் எளிதாகிவிடும் விமானப் பயணம்

விக்டோரியாவில் உள்ள பல பிராந்திய விமான நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு மேலும் 4.5 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிராந்திய விமான...

விக்டோரியர்களுக்கு எதிர்காலத்தில் எளிதாகிவிடும் விமானப் பயணம்

விக்டோரியாவில் உள்ள பல பிராந்திய விமான நிலையங்களில் வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு மேலும் 4.5 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பிராந்திய விமான...

அதிகமாக சாப்பிடும் ஆஸ்திரேலியர்களுக்கு ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கை

ஐந்து நாட்களுக்கு அதிகமாக சாப்பிடுவது மனித மூளையில் ஆரோக்கியமற்ற உணவு முறைகளுக்கான ஏக்கத்தை உருவாக்குகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வில் 20 முதல்...