Cinema நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய மல்யுத்த வீரர்கள்

நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய மல்யுத்த வீரர்கள்

-

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் ஹிட் ஆகி ஒஸ்கர் விருதையும் வென்றது. குறிப்பாக நாட்டு நாட்டு பாடலுக்கு ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து ஆடிய நடனம் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை குவித்த இந்த பாடலுக்கு சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் என பலரும் ‘ரீல்ஸ்’ நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.

அந்த வரிசையில் கடந்த வாரம் ஐதராபாத்தில் முதல் முறையாக நடைபெற்ற உலக பிரசித்தி பெற்ற ‘டபிள்யூ.டபிள்யூ.ஈ.’ போட்டிகளில் மல்யுத்த வீரர்கள் ட்ரூ மிக்கின்டைர், ஜிண்டர்மகால், சமிஜெயின், கெவின் ஓவன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் போட்டி நடந்த மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர். இதைப்பார்த்த பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 60 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை எப்போது குறையும்?

அவுஸ்திரேலியாவில் எரிபொருள் விலை குறைவதை அடுத்த வருட ஆரம்பம் வரை எதிர்பார்க்க முடியாது என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் வேகமாக குறைந்து வரும் வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் மாதத்தில் வேலை காலியிடங்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்துள்ளதாக புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில்...

பெர்த் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்கள் சில வாரங்களில் புதிய தோற்றத்தைப் பெறும்

பெர்த் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் சில வாரங்களில் மொபைல் போன் மூலம் தங்கள் கட்டணத்தைச் செலுத்த முடியும். இது...

முட்டை தேவையை பூர்த்தி செய்ய சலுகைகள் இல்லை என உற்பத்தியாளர்கள் குற்றச்சாட்டு

முட்டை தேவையை பூர்த்தி செய்ய முட்டை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான சலுகைகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என முட்டை உற்பத்தியாளர்கள் கோரிக்கை...

ஆஸ்திரேலியாவில் முலாம்பழம் விலை உயர்வு – பெர்ரி விலை குறைவு

கோடை சீசனில் ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான பழமாக இருக்கும் இனிப்பு முலாம்பழங்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோல்ஸில் விற்கப்படும்...

கடைசி உயில் சட்டங்களை கடுமையாக்கும் குயின்ஸ்லாந்து

குயின்ஸ்லாந்து மாநிலத்தில், இறந்தவர்களின் வாரிசுரிமையை குழந்தைகளுக்கு மாற்றுவது தொடர்பான சட்டங்களில் திருத்தம் செய்ய அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.