News விண்கல் மாதிரியுடன் பூமியை நெருங்கும் நாசாவின் விண்கலம்

விண்கல் மாதிரியுடன் பூமியை நெருங்கும் நாசாவின் விண்கலம்

-

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் பென்னு என்ற விண்கல்லை ஆய்வு செய்வதற்காக ஓசிரிஸ் ரெக்ஸ் என்ற விண்கலத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி நாசா செலுத்தியது.

இத்திட்டமானது, சிறுகோள்களை ஆய்வு செய்வது மற்றும் அவற்றின் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வருவதற்கான முக்கியமான செயற்திட்டமாகும்.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பென்னு விண்கல்லில் இருந்து குறைந்தது 60 கிராம் மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டு வருவதாகும்.

இதன் மூலம் சூரிய குடும்பத்தின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும், அதன் ஆரம்ப கட்ட கோளுருவாக்கம், புவியில் உயிர்களின் தோற்றத்தை நிர்ணயிக்கும் கரிம சேர்மங்களின் மூலம் ஆகியவற்றை ஆராயவுள்ளனர்.

ஓசிரிஸ் ரெக்ஸ் விண்கலம், 2 ஆண்டுகள், 2 கோடி கிலோமீற்றர் தூரம் பயணித்து, 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி பென்னு என்ற விண்கல்லை நெருங்கியது. பென்னுவில் இருந்து 19 கிலோமீற்றர் தூரத்தை அணுகியது.

அந்த தொலைவில் இருந்தபடியே தொடர்ந்து பல மாதங்கள் பென்னுவை சூழ்ந்து ஆய்வு செய்து அங்கு மாதிரியை சேகரிக்கும் இடத்தை தேர்வு செய்தது.

அதன்பின், தரையிறங்காமல் மிக நெருக்கமாக சென்று இயந்திர கையை நீட்டி விண்கல்லில் உள்ள மாதிரிகளை சேகரித்துள்ளது.

Latest news

இன்று முதல் 5 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு உடல்நலக் காப்பீட்டு பிரீமியம்

சுமார் 05 மில்லியன் அவுஸ்திரேலியர்களை பாதிக்கும் வகையில் இன்று முதல் சுகாதார காப்புறுதி பிரீமியத்தை அதிகரிக்க 05 காப்புறுதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.

ஆஸ்திரேலியா மாணவர் விசா விதிமுறைகளில் இன்று முதல் மாற்றம்

ஆஸ்திரேலியா மாணவர் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது ஒரு வருடத்திற்கு காட்டப்படும் வைப்புத் தொகை (ஷோ பணம்) இன்று முதல் $24,505 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இன்று முதல் குயின்ஸ்லாந்தில் புதிய கட்டுமான விதிமுறைகள் அறிமுகம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிய வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கான புதிய தொடர் விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

காமன்வெல்த் வங்கியின் சேவைக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படும்

ஆஸ்திரேலியாவின் 04 முக்கிய வங்கிகளில் ஒன்றான காமன்வெல்த் வங்கி, இன்று முதல் பல கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதன்படி, வர்த்தக...

சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் இன்று என்ஆர்எல் இறுதிப் போட்டி

NRL கிராண்ட் ஃபைனல் இன்று இரவு 07.30 மணிக்கு சிட்னி ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் தொடங்க உள்ளது. Penrith...

Collingwood Magpies 2023 AFL சாம்பியன்ஷிப்பை வென்றது

Collingwood Magpies 2023 AFL சாம்பியன்ஷிப்பை வெல்லும். பிரிஸ்பேன் லயன்ஸ் அணி எராஹிக்கு எதிராக 04 கூர்மையான வெற்றியைப்...