Cinemaநாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய மல்யுத்த வீரர்கள்

நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடிய மல்யுத்த வீரர்கள்

-

இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் உலக அளவில் ஹிட் ஆகி ஒஸ்கர் விருதையும் வென்றது. குறிப்பாக நாட்டு நாட்டு பாடலுக்கு ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் இணைந்து ஆடிய நடனம் உலகம் முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை குவித்த இந்த பாடலுக்கு சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் என பலரும் ‘ரீல்ஸ்’ நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன.

அந்த வரிசையில் கடந்த வாரம் ஐதராபாத்தில் முதல் முறையாக நடைபெற்ற உலக பிரசித்தி பெற்ற ‘டபிள்யூ.டபிள்யூ.ஈ.’ போட்டிகளில் மல்யுத்த வீரர்கள் ட்ரூ மிக்கின்டைர், ஜிண்டர்மகால், சமிஜெயின், கெவின் ஓவன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் போட்டி நடந்த மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடினர். இதைப்பார்த்த பார்வையாளர்கள் உற்சாகம் அடைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 60 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது.

Latest news

அதிகாரிகள் பற்றாக்குறையால் ஆபத்தில் உள்ள 000

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் காவல்துறை அதிகாரிகளின் பற்றாக்குறையால், அவசர அழைப்புகளுக்கு பதிலளிப்பதில் 000 பெரும்பாலும் தவறிவிட்டதாக ஊடகங்களில் கசிந்த பல மின்னஞ்சல்கள் வெளிப்படுத்தியுள்ளன. பொலிஸ் அழைப்பு மையம் பெறப்படும்...

iPhone 16-ஐ தடை செய்த பிரபல நாடு

இந்தோனேசியா ஆப்பிளின் உள்ளூர் முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறியதை அடுத்து, இந்தோனேசியாவில் iPhone 16 மாடல்களின் விற்பனையை ஆப்பிள் தடை செய்துள்ளது. இந்தோனேசியாவின் உள்நாட்டில் 40...

வெள்ளை மாளிகையில் கொண்டாடப்பட்ட தீபாவளி பண்டிகை

இந்துக்களின் பண்டிகையான தீபாவளி நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது....

ஆஸ்திரேலியாவில் ஒற்றை இலக்கத்தில் குறைந்த பணவீக்கம்

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, காலாண்டு நுகர்வோர் விலைக் குறியீடு ஜூன் மாதத்தில் 3.8 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2021க்குப் பிறகு பணவீக்கம் இப்படி...

கொடிய நச்சுக் காளான் வகையைப் பற்றி மெல்பேர்ண் குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

கொடிய காளான் வகையை சாப்பிட்ட மெல்பேர்ண் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மரணம் குறித்து நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், இறந்த பெண் தனது சொந்த தோட்டத்தில் வளர்க்கப்பட்ட காளான்...

ஆஸ்திரேலியாவில் ஒற்றை இலக்கத்தில் குறைந்த பணவீக்கம்

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, காலாண்டு நுகர்வோர் விலைக் குறியீடு ஜூன் மாதத்தில் 3.8 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2021க்குப் பிறகு பணவீக்கம் இப்படி...