பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி ’கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், இணையத் தொடர்களில் நடித்துள்ளார்.
சிறந்த நடிகைக்கான பல விருதுகளைப் பெற்ற இவர் தமிழில் ரஜினியுடன் ‘காலா’, அஜித்துடன் ‘வலிமை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், பெங்களூரு இலக்கிய விழாவில் தான் எழுதிய முதல் நாவலை வெளியிட்டுள்ளார்.
ஹூமா குரேஷி ‘செபா – ஆன் ஆக்சிடெண்டல் சூப்பர்ஹீரோ’ (zeba an accidental superhero) என பெயரிடப்பட்டுள்ள இந்நாவல் 1990-களிலிருந்து கொரோனா காலம் வரை நடக்கும் பேண்டஸி கலந்த கதையாக இருக்கும் என ஹூமா குரேஷி கூறியுள்ளார்.