அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குயின்ஸ்லாந்து மாநிலத் தேர்தலில் தற்போதைய பிரதமர் அன்னாஸ்டாசியா பலாஸ்சுக் தோல்வியடைவார் என புதிய ஆய்வு ஒன்று கணித்துள்ளது.
மாநில எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் கிரிசாஃபுல்லி குறிப்பிடத்தக்க வகையில் தனது பிரபலத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி ஆளும் லெபுபர் கட்சிக்கு 33 சதவீதமும், எதிர்க்கட்சியான லிபரல் தேசிய கூட்டணிக்கு 37 சதவீதமும் கிடைக்கும்.
மேலும் மிகவும் பொருத்தமான பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில், மாநில எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் கிரிசாஃபுல்லி, அன்னஸ்தேசியா பலாஸ்சூக்கை விட சுமார் 05 சதவீதம் முன்னிலையில் உள்ளார்.
இந்த கருத்துக்கணிப்பு செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் வரை நடத்தப்பட்டது.