துப்பாக்கி, பில்லா 2, அஞ்சான் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள பாலிவுட்டின் முன்னணி நடிகரான வித்யுத் ஜமால் டிசம்பர் 10 தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், பிறந்தநாளையொட்டி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
இமய மலை தொடர்களில் ஒருவார காலம் தான் வாழ்ந்த வாழ்க்கையை விவரிக்கும் வகையில், மூன்று புகைப்படங்களையும் ஏன் இப்படி ஒரு வாழ்க்கை முறையை பின்பற்றுகிறார் என்பது பற்றியும் வித்யுத் ஜம்வால் விளக்கம் அளித்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய வழக்கப்படி ஒவ்வொரு ஆண்டும் 7 முதல் 10 நாட்கள் வரை வித்யுத் ஜம்வால் யார் உதவியுமின்றி தனியாக வாழ்ந்து வருகிறார்.
ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்து காட்டு பகுதியில் யார் உதவியும் இன்றி இயற்கையுடன் ஒன்றி இருக்கும் வகையில், வித்யுத் ஜம்வால் ஏழு முதல் பத்து நாட்கள் வரை காட்டு பகுதியில் தனது உடலில் ஆடை எதுவும் இன்றி நிர்வாணமாக கழித்து வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு இமய மலை பகுதிகளில் நிர்வாணமாக வசித்துள்ளார்.
நன்றி தமிழன்