குயின்ஸ்லாந்தின் புதிய பிரதமராக ஸ்டீபன் மைல்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் பதவி விலகியதை அடுத்து அந்த பதவி காலியானது.
பலர் போட்டியிட முன்வந்துள்ள போதிலும், முன்னாள் பிரதியமைச்சர் ஸ்டீபன் மைல்ஸை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்து சுகாதார அமைச்சர் ஷானன் ஃபென்டிமன் விலகினார்.
அதன்படி, குயின்ஸ்லாந்தின் 40வது பிரதமராக ஸ்டீபன் மைல்ஸ் பதவியேற்றார்.
பிரதமர் பதவிக்கு விண்ணப்பித்த கேமரூன் டிக் என்பவரை துணைப் பிரதமராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.