தென் கொரியாவின் முன்னணி இரும்பு தயாரிப்பு நிறுவனமான POSCO, மேற்கு ஆஸ்திரேலியாவில் இரும்பு உற்பத்தி ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதில் 27 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆலை போர்ட் ஹெட்லேண்டின் தொழில்துறை பகுதியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்று தென் கொரிய நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படும் இரும்பின் அளவு 12 மில்லியன் மெட்ரிக் டன் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது ஆஸ்திரேலியாவின் இரும்பு தாது உற்பத்தியை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.