ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட ஏராளமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள் உற்பத்தி குறைபாடு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.
வாகனத்தின் பின்பகுதியில் உள்ள பல்ப் பாதுகாப்பற்றதாகவும், தண்ணீர் கசிவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகனங்களை திரும்ப பெற நிறுவன நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தண்ணீர் கசிவால், பல்பின் வெளிச்சம் குறைந்து, உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
2022 முதல் தயாரிக்கப்பட்ட 465 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அடங்கிய பட்டியல் லேண்ட் ரோவர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் லேண்ட் ரோவர் டீலர்களை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட வாகனங்களில் பல்புகளை இலவசமாக சரி செய்து கொள்ளலாம்.