பசிபிக் பெருங்கடலில் இரவு பயிற்சியின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் ஜப்பானிய கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.
இந்த இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர்கள் டோக்கியோவில் இருந்து 600 கிலோமீட்டர் தெற்கே உள்ள தீவுப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான பயிற்சியின் போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா தெரிவித்தார்.
அதனைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியில் வேறு எந்த விமானங்களோ, கப்பல்களோ இல்லாததால், இந்தச் சம்பவத்தில் வேறொரு நாடு ஈடுபட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை என கடற்படை தெரிவித்துள்ளது.
விமானத்தில் இருந்தவர்களில், தற்காப்புப் படைகளின் மூத்த தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் யூச்சி சகாமோட்டோவும் இருந்தார்.
விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.