Newsஉக்ரைன் மீது மீண்டும் டிரோன் தாக்குதல் செய்த ரஷ்ய படைகள்

உக்ரைன் மீது மீண்டும் டிரோன் தாக்குதல் செய்த ரஷ்ய படைகள்

-

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின.

இந்த நிலையில் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா டிரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த டிரோன்கள், கார்கிவ் நகரில் மக்கள் குடியிருப்பு பகுதிகளை தாக்கின.

இதில் கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடும் போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதற்கிடையே உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு எதிராக, குற்ற வழக்கு ஒன்றை ரஷ்யா பதிவு செய்துள்ளது. மேலும் அவரை தேடப்படுவோர் பட்டியலிலும் ரஷ்யா வைத்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தியில், ரஷ்ய உள்துறை அமைச்சரின் தகவலின்படி, ரஷ்யாவின் தேடப்படுவோர் பட்டியலில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உள்ளார். ஆனால், வேறு எந்த தகவலும் இல்லை என தெரிவித்து உள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...