விக்டோரியாவின் மேற்குப் பகுதியில் உள்ள பிரபல திருமண மண்டபம் காட்டுத்தீயால் எரிந்து நாசமானது.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, Dimboola பிரதேசவாசிகளை உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு மேயர் அறிவித்துள்ளார்.
தற்போது, சுமார் 190 Dimboola குடியிருப்பாளர்கள் ஹோர்ஷாமில் உள்ள தற்காலிக நிவாரண மையங்களில் தங்கள் செல்லப்பிராணிகளுடன் தங்கியுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை Little Desert National Park-இல் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக இரண்டு பண்ணை வீடுகள் மற்றும் அப்பகுதியின் புகழ்பெற்ற Little Desert Nature Lodge ஆகியவை அழிக்கப்பட்டன.
சுமார் அறுபத்து ஐந்தாயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீ விபத்தில் உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை என அவசரகால மேலாண்மை பிரிவு தெரிவித்துள்ளது.





