Newsஆஸ்திரேலியப் பிரதமர் வழங்கிய வாக்குறுதி

ஆஸ்திரேலியப் பிரதமர் வழங்கிய வாக்குறுதி

-

ஆஸ்திரேலியப் பிரதமர் Anthony Albanese தமது அரசாங்கக் கொள்கையில் தென்கிழக்காசியா முன்னுரிமை பெறும் என்று கூறியிருக்கிறார்.

அவர் ஆஸ்திரேலிய அமைச்சர்களோடு இந்தோனேசியாவுக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்த பயணத்தின் இறுதி நாள் இன்றாகும்.

வர்த்தகம், பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் இந்தோனேசியாவுடன் ஆஸ்திரேலியா அணுக்கமாய்ச் செயல்படும் என்று அவர் இந்தோனேசியாவுக்கு உறுதி கூறினார்.

மேலும், இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவை ஆஸ்திரேலியப் பிரதமர் சந்தித்தார்.

விவசாயத்துறை, உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் உறவை வலுப்படுத்த அவர்கள் உறுதி தெரிவித்தனர். மேலும் இந்த சந்திப்பில் உக்ரேன் விவகாரம் குறித்தும் பேசப்பட்டது.

Latest news

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் – ஆஸ்திரேலிய ஆய்வில் தகவல்

உடல் பருமனை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிகவும் பொருத்தமான பழம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் வாழைப்பழம், வெண்ணெய், கீரை, தக்காளி மற்றும் கேரட் போன்றவற்றை அதிகம்...

10 சதவீதத்தால் குறைந்துள்ள iPhone விற்பனை

உலகின் மிகவும் பிரபலமான போன் மாடலான ஐபோன் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையை பாதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இது...

அவுஸ்திரேலியாவில் பணியாற்றிய இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை நாடு கடத்த முடிவு

அவுஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் இவர்கள் இரகசியமாக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உளவாளிகள் இருவர்...

ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள்

ஏப்ரல் மாத வாகன விற்பனை அறிக்கையின்படி, ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள் பெயரிடப்பட்டுள்ளன. பெடரல் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் 97,202...

மூடநம்பிக்கையால் பறிபோன அப்பாவி இளைஞரின் உயிர்

இந்தியாவின் உத்தர பிரதேசத்தின் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26 ஆம்...

மெல்போர்ன் வணிக வளாகத்தில் கூரிய ஆயுதங்களுடன் மீண்டும் ஒருவர் கைது

மெல்போர்னில் உள்ள வாட்டர்கார்டன் ஷாப்பிங் சென்டரில் கத்தியை காட்டி வன்முறையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர் . அதே ஷாப்பிங் சென்டரில் உள்ள கடையில் கத்தியை...