News ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட தமிழக சிற்பங்கள் - காணாமல் போனது எப்படி?

ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட தமிழக சிற்பங்கள் – காணாமல் போனது எப்படி?

-

சமீபத்தில் ஆஸ்திரேலியா நாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சிலையில் டெல்லியில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிலை ஒப்படைக்கப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, கடவுளை வீட்டிற்கு கொண்டு வருவது நமது பாரம்பரியத்தை பாதுகாத்தல், மேம்படுத்துதல் அரசாங்கத்தின் முன்முயற்சியாகும். சுதந்திரம் பெற்றது முதல் 2013 வரை, வெறும் 13 சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டு வந்துள்ளது. ஆனால், 2014 முதல் தற்போது வரை 228 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து 2020 இல் மீட்டெடுக்கப்பட்ட இந்த கல் சிற்பம், 15-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர வம்சத்தைச் சேர்ந்தது. அதில், அவர் ஒரு கையில் கடாவைப் பிடித்துக்கொண்டும், ஒரு காலை முழங்கால் அளவுக்கு உயர்த்தியும் இருப்பார். ர். திருநெவேலியில் உள்ள மூண்டீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து 1994 ஆம் ஆண்டு இந்த சிற்பம் திருடப்பட்டது.

2021 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டது. அதில், நடராஜரின் உருவம், அவரது தெய்வீக பிரபஞ்ச நடன வடிவத்தில், தாமரை பீடத்தின் மீது திரிபங்க தோரணையில் உள்ளது. இது 11-12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. தஞ்சாவூர், புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் கோயிலின் வலுவான அறையில் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டு சிற்பம் திருடப்பட்டது.

2021 இல் அமெரிக்காவில் இருந்து சிலை மீட்கப்பட்டது. அதில், சிவன் மற்றும் பைரவரின் பயங்கரமான அம்சமாக கண்கலமூர்த்தி சித்தரிக்கப்படுகிறார். சிற்பம் நான்கு கரங்களைக் கொண்டது. மேல் இருக்கும் கைகளில் டமரு மற்றும் திரிசூலம் போன்ற ஆயுதங்களையும்,
கீழே இருக்கும் கைகளில் ஒரு கிண்ணத்தையும், மூங்கில் வடிவ பொருளையும் வைத்திருப்பார். இந்த சிலை 12-13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. திருநெல்வேலி நரசிங்கநாதர் சுவாமி கோயிலில் இருந்து 1985ஆம் ஆண்டு திருடப்பட்டது.

2021 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டது. இந்த வெண்கல சிலை, 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதில், நந்திகேசுவரா கூப்பிய கரங்களுடன் திரிபங்க தோரணையில் நிற்கிறார். அவரது முன்கைகள் நமஸ்காரம் முத்திரையும், மேல் இருக்கும் கைகளில் கோடாரி மற்றும் மான் குட்டியையும் கொண்டுள்ளது. இந்த சிற்பம் திருநெல்வேலி நரசிங்கநாதர் சுவாமி கோயிலில் இருந்து 1985ஆம் ஆண்டு திருடப்பட்டது.

2021 இல் அமெரிக்காவிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது. 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த சிலை, பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்தது. இரண்டு கைகளில் சங்கு மற்றும் சக்கரத்தை வைத்திருக்கும் விஷ்ணு, பத்ம பீடத்தின் மீது நிற்கிறார். அப்போது, கீழ் வலது கைகள் அபய முத்திரையில் இருக்கின்றன. இது அரியலூர் அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து 2008ஆம் ஆண்டு திருடப்பட்டது.

அமெரிக்காவில் இருந்து 2021 இல் மீட்கப்பட்டது. இது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சிற்பத்தை சித்தரிக்கிறது. இடது கையில் தாமரையைப் பிடித்தப்படியும், வலதுபுற கை கால்களுக்கு அருகில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ரியலூர் அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோவிலில் இருந்து கடந்த 2008ம் ஆண்டு இந்த சிற்பம் திருடப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் இருந்து 2022 இல் மீட்டெடுக்கப்பட்டது. சம்பந்தர், 7 ஆம் நூற்றாண்டின் பிரபலமான குழந்தை துறவி, தென்னிந்தியாவின் மூன்று முக்கிய துறவிகளான மூவர்களில் ஒருவர். இச்சிற்பம் 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

உமா தேவியிடம் பால் கிண்ணத்தைப் பெற்ற பிறகு, குழந்தை சம்பந்தர் சிவபெருமானைப் போற்றும் பாடல்களை இயற்றுவதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார் என புராணம் கூறுகிறது. இது 1965 முதல் 1975க்குள் நாகப்பட்டினம் சயவனீஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்டது.

Latest news

ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரரின் மோசமான செயல் – அபராதம் விதிக்க திட்டம்

ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரருக்கு அபராதம் விதிப்பது குறித்து, விம்பிள்டன் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்களுக்கு சிறந்த இடமாகியுள்ள ஆஸ்திரேலிய நகரங்கள்!

உலகளவில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கி படிப்பதற்கான சிறந்த 140 நகரங்களின் பட்டியலில் ஆஸ்திரேலிய நகரங்களும் இடம்பிடித்துள்ளது.

கொழும்பில் தொங்கவிடப்பட்ட முச்சக்கர வண்டி – வெளியான பின்னணி

கொழும்பு, இராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் முச்சக்கர வண்டி முச்சக்கர வண்டி ஒன்று தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான காரணம்...

46 இலங்கையர்களை நாடு கடத்திய ஆஸ்திரேலியா

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயன்ற 46 இலங்கையர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் கைது செய்து ஆஸ்திரேலியாவுக்குச்...

ஆஸ்திரேலியாவில் முக்கிய பொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு!

ஆஸ்திரேலியாவில் பல பகுதிகளில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடி...