Newsஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றச் சந்திப்பில் வெளிநடப்புச் செய்த ரஷ்யத் தூதுவர்!

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றச் சந்திப்பில் வெளிநடப்புச் செய்த ரஷ்யத் தூதுவர்!

-

ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றச் சந்திப்பின்போது, ரஷ்யத் தூதுவர்வசிலி நெபென்ஸியா (Vassily Nebenzia) வெளிநடப்புச் செய்திருக்கிறார்.

ரஷ்யா, உக்ரேன்மீது படையெடுத்ததால் உலக அளவில் உணவு நெருக்கடி உருவாகியிருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியிருந்தது.

ஒன்றியத் தலைவர் சார்ல்ஸ் மிஷெல் (Charles Michel), திரு. நெபென்ஸியாவை நேரடியாகச் சாடியதைத் தொடர்ந்து அந்தச் சம்பவம் நேர்ந்தது.

மக்களை ஏழ்மைக்கு இட்டுச்செல்வதற்கு ரஷ்யாவே முழுப் பொறுப்பு என்று அவர் குறைகூறினார். வளர்ந்துவரும் நாடுகளுக்கு எதிராக ரஷ்ய அரசாங்கம் உணவு விநியோகத்தைப் பகடைக் காயைப் போல் பயன்படுத்துவதாகத் திரு. மிஷெல் குறிப்பிட்டார்.

தானியக் கிடங்குகளைக் குறிவைத்து, உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

ரஷ்யா மற்றவர்கள் மீது பழி சுமத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறையைவிட்டு வெளியேறலாம் என்றும் உண்மையைக் கேட்பது எளிதாக இருக்காது என்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர், ரஷ்யத் தூதரிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.

Latest news

அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்

அடிக்கடி கோபம் கொள்வது மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 280 ஆரோக்கியமான இளைஞர்களின் பங்கேற்புடன் American Heart Association-ன் ஆய்வுக் குழுவினால் இந்த ஆய்வு...

குழந்தைகள் மத்தியில் பரவும் மின்னணு சிகரெட் – கட்டுப்படுத்த அரசு முடிவு

விக்டோரியா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடையே இலத்திரனியல் சிகரெட்டுகள் வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த பாடசாலை மட்டத்தில் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் சிகரெட்டைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து...

குயின்ஸ்லாந்தில் வசிப்பவர்களுக்கு மின்சார கட்டணத்தில் இருந்து பெரும் நிவாரணம்

குயின்ஸ்லாந்தில் உள்ளவர்கள் புதிய திட்டத்தின் கீழ் தங்கள் ஆற்றல் கட்டணத்தில் $1000 தள்ளுபடி பெற உள்ளனர். குயின்ஸ்லாந்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மாநில அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விரிவான...

தெற்கு ஆஸ்திரேலியாவில் குடும்ப வன்முறை குற்றவாளிகளுக்கான புதிய சட்டங்கள்

தெற்கு ஆஸ்திரேலியா குடும்ப வன்முறை குற்றவாளிகளுக்கு மீண்டும் கடுமையான சட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மாநில நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களைத் தொடர்ந்து, குடும்ப வன்முறை குற்றவாளிகள் நாட்டின் சில கடுமையான...