Newsஇலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய ஆஸ்திரேலிய அரசாங்கம்!

இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய ஆஸ்திரேலிய அரசாங்கம்!

-

சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 15 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் சுமார் 19 நாட்களுக்கு முன்பு பல நாள் மீன்பிடி இழுவை படகொன்றில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​​​ஆஸ்திரேலியா கடற்கரையில், குறித்த படகில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

அதன்போது, ஆ​ஸ்திரேலிய எல்லைக் பாதுகாப்பு படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, குறித்த 15 பேரும் கிறிஸ்மஸ் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து அந்நாட்டு விமானப்படையின் விசேட விமானம் மூலம் இன்று அதிகாலை 4.40 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கையர்களுடன் பெருமளவான ஆஸ்திரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இலங்கையர்கள் குழு இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

Latest news

காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் குறித்து இஸ்ரேலின் அறிக்கை

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் இறுதிச் சடங்குகளில் காசா நகரில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கலந்து கொண்டனர். இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில்...

இன்று காலை விக்டோரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

மெல்பேர்ணின் தென்கிழக்கே விக்டோரியாவில் உள்ள மார்னிங்டன் தீபகற்பத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அரசாங்கத்தின் புவியியல் வலைத்தளம் கூறுகிறது. இது ரிக்டர்...

மிகவும் திருப்தியான வாடிக்கையாளர் விருதை வென்ற சூப்பர் மார்க்கெட்

ஆஸ்திரேலியாவின் விருப்பமான பல்பொருள் அங்காடியாக Aldi மீண்டும் ஒருமுறை வாடிக்கையாளர்களால் மகுடம் சூட்டப்பட்டுள்ளது. Aldi தொடர்ந்து எட்டாவது முறையாக இந்த விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு முக்கிய...

ஒரு பெரிய ஆஸ்திரேலிய வங்கியிடமிருந்து சாதனை லாபம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கடன் மற்றும் வைப்பு நிறுவனமான Commonwealth வங்கி, 2024/25 நிதியாண்டில் ஆண்டுக்கு $10.25 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு வீட்டு உரிமையாளர்கள் மற்றும்...

விக்டோரியாவில் கார் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு

விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். புதன்கிழமை மாலை 6 மணியளவில் Moe-இல் உள்ள Lloyd தெருவிற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. இன்னும்...

வாகன நிறுத்துமிடத்தில் சிறப்பாகச் செயல்பட்ட முன்னாள் பிரதமர்

முன்னாள் பிரதமர் Tony Abbott வாகன நிறுத்துமிடத்தில் பயணிகளுக்கு உதவும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பிரதமராக இருந்தார்....