சூர்யாவிற்கு ரோலக்ஸ் கைகடிகாரத்தை பரிசாக வழங்கிய கமல்ஹாசன்

0
266

விக்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு, கமல் ரோலக்ஸ் வாட்சை பரிசளித்துள்ளார். கமலின் கடந்த 2 நாட்கள் நடவடிக்கையை பார்க்கும்போது, அவர் பரிசளிப்பு விழா நடத்தி வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விக்ரம் படத்தை வெற்றிப் படமாக உருவாக்கிய இயக்குனர் லோகேஷ்க்கு நேற்று லெக்சஸ் சொகுசு காரை கமல் பரிசளித்தார். இந்த காரின் விலை ரூ. 80 லட்சம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முகப்பில் இருக்கும் L என்ற லெக்சஸின் லோகோவை, லோகேஷ் என்று அவரது ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

அடுத்ததாக உதவி இயக்குனர்கள் 13 பேருக்கு TVS Apache 160 CC RTR பைக்குகளை கமல் பரிசளித்துள்ளார். இந்த பைக்குகள் ஒவ்வொன்றும் தலா ரூ. 1.20 லட்சம் வரை வருகின்றன. கமலின் பரிசளிப்பு தொடரும் என்று நேற்றே பலரும் எதிர்பார்த்தனர். இந்த நிலையில் சர்ப்ரைஸாக நடிகர் சூர்யாவுக்கு அவர் ரோலக்ஸ் வாட்ச்சை பரிசளித்துள்ளார். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் மிரட்டியிருப்பார். விக்ரம் படத்திற்காக சூர்யா சம்பளம் ஏதும் வாங்காமல் நடித்திருந்தார்.

இதனை தன் மீது கொண்ட அன்புக்காக சூர்யா செய்தார் என்று கமலும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ரோலக்சுக்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இருந்தார். கமல் தனது கையில் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச்சை தான் சூர்யாவிற்கு பரிசாக வழங்கினார் என்றொரு தகவல் பரவி வருகிறது.

Previous articleநயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண வைபவங்கள் துவங்கின
Next articleஇலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய ஆஸ்திரேலிய அரசாங்கம்!