Newsசகோதரியை கொலை செய்த 3 வயது சிறுமி - அமெரிக்காவில் பயங்கர...

சகோதரியை கொலை செய்த 3 வயது சிறுமி – அமெரிக்காவில் பயங்கர சம்பவம்

-

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புள்ளது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 

அதில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். 

இந்த நிலையில் உறவினர்களுடன் அமர்ந்து பெற்றோர் பேசிக்கொண்டிருந்த நிலையில் 2 குழந்தைகளும் வேறொரு அறையில் விளையாடிக் கொண்டிருந்தனர். 

அப்போது அந்த 3 வயது பெண் குழந்தை வீட்டில் கீழே கிடந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென துப்பாக்கியில் இருந்து குண்டு வெடித்தது. 

இந்த சத்தம் கேட்டு மற்றொரு அறையில் இருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர்.

அங்கு அவர்களது 4 வயது பெண் குழந்தை குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இதனையடுத்து, குழந்தையை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவம் தற்செயலாக நடந்ததாக சொல்லப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஏதேனும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.

நன்றி தமிழன்

Latest news

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...

Rottnest தீவில் சொகுசு படகில் ஏற்பட்ட தீ விபத்து

ஆஸ்திரேலியாவின் ரோட்னெஸ்ட் தீவு அருகே தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்த சொகுசு கப்பல் குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கப்பல் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து , ரோட்னெஸ்ட் தீவில்...

பிரதமரிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி இணையத்தில் வைரல்

பிரதமர் அந்தோணி அல்பானீஸிடம் குடியேறிகள் குறித்து ஒருவர் கேட்ட கேள்வி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலின் லாபி அருகே நின்று கொண்டிருந்தபோது...

மெல்பேர்ண் நகரில் பரபரப்பான தெருவில் கத்திக்குத்து – ஒருவர் பலி

மெல்பேர்ணில் உள்ள சேப்பல் தெருவில் 20 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மெல்பேர்ணின் மிகவும் பரபரப்பான தெருவான சேப்பல் தெருவில்...

புடினின் ஈஸ்டர் போர்நிறுத்தத்தை சந்தேகிக்கும் ஜெலென்ஸ்கி

ஈஸ்டர் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்குப் பிறகும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனுடனான போரில் ரஷ்ய...