Newsஇலங்கையில் முதலாவது டெஸ்ட் போட்டியை ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த தீர்மானம்!

இலங்கையில் முதலாவது டெஸ்ட் போட்டியை ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த தீர்மானம்!

-

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியை கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வோர்னின் நினைவாக நடாத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சுற்றுலா அமைச்சுடன் இணைந்து தீர்மானித்துள்ளது.

கிரிகெட் உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் இந்த ஆண்டு மார்ச் மாதம் காலமானார், இது ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியது.

ஷேன் வோர்ன் கிரிகெட் களத்தில் இலங்கையின் கடுமையான போட்டியாளர்களில் ஒருவராகவும், அதற்கு வெளியே ஒரு அன்பான நண்பராகவும் இருந்துள்ளார். 2004 இல் சுனாமி பேரழிவைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட்டை மீண்டும் கட்டியெழுப்புவதில் அவர் ஒரு முக்கிய நபராக இருந்தார்.

இலங்கை மற்றும் சுற்றுலா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது.

வோர்ன் நினைவு டெஸ்ட் போட்டியில் வோர்னின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் சபை உறுதி செய்துள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அஞ்சல் வாக்களிப்பு பற்றி விழிப்புணர்வு

ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம், கூட்டாட்சித் தேர்தலில் அஞ்சல் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 23 ஆம் திகதி மாலை 6 மணியுடன் முடிவடையும் என்று கூறுகிறது. மே 3...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பாம்பு கடி

உங்கள் வீட்டிற்குள் வரும் பாம்புகளைத் தொடவோ அல்லது பிடிக்க முயற்சிக்கவோ கூடாது என்று ஆஸ்திரேலிய வனவிலங்கு மீட்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வீட்டிற்குள் பாம்பு நுழைந்தால், அனைத்து...

பாலின ஊதிய சமத்துவமின்மை குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

பாலின ஊதிய இடைவெளியை நிவர்த்தி செய்ய நியாயமான பணி ஆணையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. அதிக பெண் பணியாளர்களைக் கொண்ட தொழில்களில் லட்சக்கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு...

வேற்றுகிரகவாசிகள் பற்றி வெளியான வலுவான தடயங்கள்

வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான வலுவான தடயங்களில் ஒன்றை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இது K2-18b என்று அழைக்கப்படும் ஒரு கிரகம், இது பூமியின் சூரிய மண்டலத்தில் இல்லை, ஆனால்...

மெல்பேர்ண் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்

மெல்பேர்ணின் தென்கிழக்கே உள்ள விமான நிலையத்தில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. மெல்பேர்ணின் தென்கிழக்கில் உள்ள மூராபின் பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டு பேரை ஏற்றிச்...

சிட்னியில் பரவிவரும் ஒரு நோய் – ஒருவர் மரணம்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் லெஜியோனேயர்ஸ் நோயின் பரவலால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு குழுவினரின் அறிகுறிகள் வெளிவருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். மார்ச் 13 முதல் ஏப்ரல் 5 வரை சிட்னி...