Newsசந்திரனில் ஜப்பான் விண்கலம் தரையிறங்கும் முயற்சி தோல்வி

சந்திரனில் ஜப்பான் விண்கலம் தரையிறங்கும் முயற்சி தோல்வி

-

ஐ ஸ்பேஸ் நிறுவனம் 2010-ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சந்திரனுக்கு வணிக ரீதியான போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது.

இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் விண்கலங்கள் மட்டும் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன.

இதற்கிடையே, ஐ ஸ்பேஸ் நிறுவனத்தின் ஹக்குடோ என்ற விணகலம் கடந்த டிசம்பரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

கடந்த மாதம் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையை சென்றடைந்த ஹக்குடோ விண்கலம், 100 கிலோமீற்றர் உயரத்தில் சந்திரனைச் சுற்றி வந்தது. இந்நிலையில், நேற்று இரவு 10 மணி அளவில் சந்திரனில் தரையிறங்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் சந்திரனில் தரையிறங்குவதற்கு முன் அந்த விண்கலத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் தரையிறங்கிய போது அந்த விண்கலம் மோதி நொறுங்கியது.

சந்திரனில் தரையிறக்கும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என விண்கலத்தை செலுத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.

நன்றி தமிழன்

Latest news

பாலி மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை

பாலி தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தட்டம்மை தடுப்பூசியைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குயின்ஸ்லாந்து சுகாதார அதிகாரிகள் Cairns நகரில் இரண்டாவது தட்டம்மை நோயை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த...

சீன விஞ்ஞானிகளுக்கு நாசாவில் விதிக்கப்பட்ட தடை!

அமெரிக்க விசாக்களைக் கொண்ட சீன விஞ்ஞானிகள் பிரதிநிதித்துவத் திட்டங்களில் பங்கேற்பதை நாசா தடை செய்துள்ளது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் புதிய கொள்கை செப்டம்பர் 5 ஆம் திகதி...

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்ட 100,000 பேரில், 90% பேர் பெண்கள்

ஜப்பானில் 100 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 99,763 ஐ எட்டியுள்ளது. செப்டம்பர் 1 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஜப்பானிய சுகாதார அமைச்சக தரவுகளின்படி, இந்த எண்ணிக்கையில் 90%...

ஆஸ்திரேலியாவில் உள்ள முஸ்லிம் சமூகத்திற்கான 54 பரிந்துரைகள் கொண்ட திட்டம்

ஆஸ்திரேலியாவின் முஸ்லிம் சமூகத்தின் மத சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு பெரிய திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் அடங்கிய அறிக்கையை அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதி Aftab...