Melbourneஇறைச்சியால் பார்வையை இழக்கும் அளவு ஆபத்து - ஆஸ்திரேலியா ஆய்வில் அதிர்ச்சி...

இறைச்சியால் பார்வையை இழக்கும் அளவு ஆபத்து – ஆஸ்திரேலியா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

-

இறைச்சியின் தரம் மற்றும் அதை வேக வைக்கும் கால அளவு ஆகிய இரண்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் பின்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபிலிண்டர்ஸ் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. அதாவது பூனையின் மலத்தில் இருந்து வெளியேறும் தொற்றுகள் மற்றும் வேக வைக்காத இறைச்சி ஆகியவற்றில் டோஸோபிளாஸ்மா கோண்டி என்ற பாராசைட் உள்ளது.

இது கண் பார்வையை இழக்க வழிவகை செய்யும். ஆஸ்திரேலியாவில் 15 நபரில் ஒருவருக்கு இத்தகைய பிரச்சினை இருக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 5,000 மக்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், டோஸோபிளாஸ்மா என்பது மனிதர்களின் கண் பார்வையை இழக்க வைக்கிறது என்பது தெரிய வருகிறது. இந்த பாராசைட்கள், கருவுற்ற தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு பரவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு பாராசைட் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை பின்வரும் அறிகுறிகளைப் பொருத்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம். காய்ச்சல், வீக்கம் அடைந்த விழித்திரை, தசைகளில் வலி, தலைவலி, கல்லீரல் அல்லது மண்ணீரல் வீக்கம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்ற சில வகை விலங்கு இறைச்சிகளில் டிரிச்சினெல்லா என்னும் தொற்று இருக்கும். முறையாக சமைக்காத அல்லது வேக வைக்கப்படாத இறைச்சியை நீங்கள் சாப்பிடும்போது இந்த தொற்று உங்களுக்கு பரவும்.

முறையாக வேக வைக்காத அல்லது பச்சையாக உள்ள இறைச்சியை நீங்கள் சாப்பிடும்போது லிஸ்டேரியா, இ-கோலி, கேம்பிலோபேக்டர் போன்ற பாக்டீரியா தொற்று ஏற்பட்டு, அதன் காரணமாக வயிற்றுப்போக்கு உண்டாகும்.

நீங்கள் சாப்பிடுவதற்காக வாங்கும் இறைச்சி புதியதாக, முறையாக சுத்தம் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். அதை நன்றாக வேக வைக்க வேண்டும். சிலர் அரைகுறையாக வேக வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவராக இருப்பார்கள். அப்படி சாப்பிடும்போது தொற்று பரவக் கூடும்.

இந்த தொற்றானது சக மனிதர்களுக்கும் பரவக் கூடும். ஆகவே கவனமுடன் இருக்க வேண்டும். முறையாக வேக வைக்கப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதே உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயம் ஆகும்.

Latest news

விக்டோரியாவில் திரும்பப் பெறப்பட்டுள்ள ஹோட்டல் தனிமைப்படுத்தல் தொடர்பான புகார்கள்

கோவிட் தொற்றுநோய்களின் போது ஹோட்டல் தனிமைப்படுத்தல் தொடர்பாக விக்டோரியா சுகாதாரத் துறை மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை பொது புகார்கள் இயக்குனர் திரும்பப் பெற்றுள்ளார். 2020ல் தொடங்கப்பட்ட கோவிட்-19...

சுகாதார அமைச்சரின் வருகையின் போது நோயாளிகளாகச் செயற்படும் சுகாதாரப் பணியாளர்கள்

விக்டோரியாவின் சுகாதார அமைச்சர் மேரி-ஆன் தாமஸின் வருகையின் போது மருத்துவமனை ஊழியர்கள் குழு ஒன்று நோயாளிகள் போல் நடித்ததாக சுகாதாரத் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆகஸ்ட்...

உலகின் சிறந்த கடற்கரைகளில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் 3 கடற்கரைகள்

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான 50 கடற்கரைகளில் மூன்று ஆஸ்திரேலிய கடற்கரைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றில் முதல் 10 இடங்களில் ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரை ஒன்று இடம் பெற்றுள்ளது சிறப்பு. பீஸ்ட்...

பில்லியனர்கள் அதிகம் உள்ள 10 நகரங்கள் இதோ!

உலகின் டாப் 10 பில்லியனர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஃபோர்ப்ஸ் இதழின் தரவுகளின்படி, இந்த ஆண்டு உலகம் முழுவதும் 2,781 பில்லியனர்கள் பரவியுள்ளனர். ஃபோர்ப்ஸின் சமீபத்திய பட்டியலின்படி, பில்லியனர்களில் கால் பகுதியினர்...

உலகின் சிறந்த கடற்கரைகளில் இடம்பெற்றுள்ள ஆஸ்திரேலியாவின் 3 கடற்கரைகள்

உலகின் மிகவும் கவர்ச்சிகரமான 50 கடற்கரைகளில் மூன்று ஆஸ்திரேலிய கடற்கரைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றில் முதல் 10 இடங்களில் ஆஸ்திரேலியாவில் உள்ள கடற்கரை ஒன்று இடம் பெற்றுள்ளது சிறப்பு. பீஸ்ட்...

பில்லியனர்கள் அதிகம் உள்ள 10 நகரங்கள் இதோ!

உலகின் டாப் 10 பில்லியனர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஃபோர்ப்ஸ் இதழின் தரவுகளின்படி, இந்த ஆண்டு உலகம் முழுவதும் 2,781 பில்லியனர்கள் பரவியுள்ளனர். ஃபோர்ப்ஸின் சமீபத்திய பட்டியலின்படி, பில்லியனர்களில் கால் பகுதியினர்...